உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அருண்மொழிதேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருண்மொழிதேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 24, 2010

27-ம் தேதி பந்த் கடலூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

 கடலூர்:

                   விலைவாசி உயர்வைக் கண்டித்து, 27-ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

                       விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. இதற்குக் கண்டனம் தெரிவித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்  திரும்பப்பெற வலியுறுத்தியும், உரவிலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பையும் பாதிக்கும் மின்வெட்டைக் கண்டித்தும், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடத்த 13 கட்சிகள் முடிவுசெய்து உள்ளன.

                  கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பு, பொதுவேலைநிறுத்தப் போராட்டம் முழுமையாக வெற்றிபெறச் செய்வது என்று, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடையடைப்பு- பொது வேலைநிறுத்தத்தை விளக்கி 24, 25 தேதிகளில் மாவட்டம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், தெருமுனைப் பிரசாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக வர்த்தக சங்கங்கள், வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும், தோழமைக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் கடிதம் அளித்து, ஆதரவு கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.26-ம் தேதி அனைத்து நகரங்களிலும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் திரளாக பங்கேற்று கடைகள் தோறும் நோட்டீஸ் அளித்து ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ÷அனைத்து தரப்பினரும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, முழுமையாகப் பங்கேற்று வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், துணைச் செயலாளர் எம்.சேகர், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், மார்ச் 02, 2010

தனது குடும்பம் வளம் பெறவே திட்டங்கள் கொண்டு வருகிறார் : செம்மலை

குறிஞ்சிப்பாடி : 

                         இந்தியாவில் உள்ள பல சிமென்ட் ஆலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது என அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் உமாதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், தலைமை பேச்சாளர் சோமசுந்தரம் பேசினர்.

அமைப்பு செயலாளரான எம்.பி., செம்மலை பேசியதாவது: 

                    கருணாநிதி பணம் சம்பாதிப்பதையே குறியாக உள்ளார்.  கஜானாவை காலி செய்து தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து வருகிறார்.  இலவச "டிவி' வழங்குவது மக்கள் நன்மைக்கு இல்லை. தன் குடும்பம் நடத்தும் "டிவி' சேனல்களுக்கு விளம்பரம் மூலமும் கேபிள் மூலமும் பணம் வசூல் செய்வதற்குதான்.
 
                       குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீட்டு திட்டம் என்று மக்களை மயக்கி கொண்டு இருக்கிறார். காப்பீட்டு திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்காமல் கருணாநிதி பேரன் தமிழ் நிர்வாக இயக்குனராக இருக்கும் ஸ்டார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு ஆண் டுக்கு மக்கள் பணத்தை 2 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 400 கோடி ரூபாயை கமிஷனாக பெறுகின்றனர்.
 
                         தற்போது கூரை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றப்போவதாக கூறி வருகிறார். நாட்டில் உள்ள பல சிமென்ட் தொழிற்சாலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது. சிமென்ட் அதிகளவில் விற்பனை செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.என்.எல்.சி., தொழிலாளர்கள்  இந்த தொகுதி அமைச்சர் மீது வெறுப்பாக உள்ளனர். பொங்கல் போனஸ் பெற்று தர பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் தொழிலாளர்கள் கேட்ட 90 சதவீதம் பெற்று தராமல் நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி தொ.மு.ச., நிர்வாகிகளை மிரட்டி 45 சதவீதத்திற்கு முடித்து விட் டார். தொழிலாளர்க்கு துரோகம் செய்து விட்டார். இவ்வாறு எம்.பி., செம்மலை பேசினார்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு திரளாக பங்கேற்க முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பதென செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சேத்தியாத்தோப்பு எஸ்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், அவைத் தலைவர் காசி முன்னிலை வகித்தனர்.
 
         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க. செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் துணை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் கிளி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் 13ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும்  ஜெ., தலைமையிலான போராட்டத்தில் புவனகிரி ஒன்றியத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வது, வரும் 24ம் தேதி ஜெ., பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior