உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

27-ம் தேதி பந்த் கடலூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

 கடலூர்:

                   விலைவாசி உயர்வைக் கண்டித்து, 27-ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

                       விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. இதற்குக் கண்டனம் தெரிவித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்  திரும்பப்பெற வலியுறுத்தியும், உரவிலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பையும் பாதிக்கும் மின்வெட்டைக் கண்டித்தும், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடத்த 13 கட்சிகள் முடிவுசெய்து உள்ளன.

                  கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பு, பொதுவேலைநிறுத்தப் போராட்டம் முழுமையாக வெற்றிபெறச் செய்வது என்று, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடையடைப்பு- பொது வேலைநிறுத்தத்தை விளக்கி 24, 25 தேதிகளில் மாவட்டம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், தெருமுனைப் பிரசாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக வர்த்தக சங்கங்கள், வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும், தோழமைக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் கடிதம் அளித்து, ஆதரவு கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.26-ம் தேதி அனைத்து நகரங்களிலும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் திரளாக பங்கேற்று கடைகள் தோறும் நோட்டீஸ் அளித்து ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ÷அனைத்து தரப்பினரும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, முழுமையாகப் பங்கேற்று வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், துணைச் செயலாளர் எம்.சேகர், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior