உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

தனது குடும்பம் வளம் பெறவே திட்டங்கள் கொண்டு வருகிறார் : செம்மலை

குறிஞ்சிப்பாடி : 

                         இந்தியாவில் உள்ள பல சிமென்ட் ஆலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது என அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் உமாதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், தலைமை பேச்சாளர் சோமசுந்தரம் பேசினர்.

அமைப்பு செயலாளரான எம்.பி., செம்மலை பேசியதாவது: 

                    கருணாநிதி பணம் சம்பாதிப்பதையே குறியாக உள்ளார்.  கஜானாவை காலி செய்து தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து வருகிறார்.  இலவச "டிவி' வழங்குவது மக்கள் நன்மைக்கு இல்லை. தன் குடும்பம் நடத்தும் "டிவி' சேனல்களுக்கு விளம்பரம் மூலமும் கேபிள் மூலமும் பணம் வசூல் செய்வதற்குதான்.
 
                       குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீட்டு திட்டம் என்று மக்களை மயக்கி கொண்டு இருக்கிறார். காப்பீட்டு திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்காமல் கருணாநிதி பேரன் தமிழ் நிர்வாக இயக்குனராக இருக்கும் ஸ்டார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு ஆண் டுக்கு மக்கள் பணத்தை 2 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 400 கோடி ரூபாயை கமிஷனாக பெறுகின்றனர்.
 
                         தற்போது கூரை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றப்போவதாக கூறி வருகிறார். நாட்டில் உள்ள பல சிமென்ட் தொழிற்சாலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது. சிமென்ட் அதிகளவில் விற்பனை செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.என்.எல்.சி., தொழிலாளர்கள்  இந்த தொகுதி அமைச்சர் மீது வெறுப்பாக உள்ளனர். பொங்கல் போனஸ் பெற்று தர பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் தொழிலாளர்கள் கேட்ட 90 சதவீதம் பெற்று தராமல் நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி தொ.மு.ச., நிர்வாகிகளை மிரட்டி 45 சதவீதத்திற்கு முடித்து விட் டார். தொழிலாளர்க்கு துரோகம் செய்து விட்டார். இவ்வாறு எம்.பி., செம்மலை பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior