உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆராய்ச்சிப் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆராய்ச்சிப் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தொலைதூரக் கல்வி முதுகலை பட்டம் ஆராய்ச்சிப் படிப்பிற்கு (Ph.d) செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

            "தொலை தூரக் கல்வி மூலம் படித்த முதுகலை படிப்பை, பி.எச்.டி., படிப்புக்கு தகுதியாக அனுமதிக்க முடியாது என, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவு செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலையில், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜன் என்பவர் பி.எச்.டி., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

             ஆனால், தொலைதூரக் கல்வி மூலம், முதுகலை பட்டம் பெற்றுள்ளதால், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜனுக்கு தகுதியில்லை என, ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் நடராஜன் மனுத் தாக்கல் செய்தார். பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். 

மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:

              கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த சுற்றறிக்கையில், தொலை தூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், முதுகலை பட்டங்கள், பட்டயங்களை அங்கீகரிக்கக் கூடாது என, கொள்கை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே நிலையை உறுதி செய்து, மார்ச்சில் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த முடிவு, அண்ணா பல்கலையை கட்டுப்படுத்தும். மனுதாரரை பி.எச்.டி., படிப்புக்கு அவரை சேர்க்காதது நியாயமானது. எனவே, ஆய்வு மையத்தின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முகாந்திரமில்லை. அந்த உத்தரவு செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.



Read more »

திங்கள், ஜூன் 20, 2011

ஆராய்ச்சி கட்டுரைகளை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய புதிய திட்டம்

        உலகளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை மின்னணு வசதி மூலம் கல்லூரிகளிலேயே மாணவர்கள் இலவசமாக பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

        முதுகலை பட்ட மேற்படிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆய்வுக்கு தேவையான ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு புத்தகங்களில் இருந்து திரட்டுகின்றனர். இதில் முக்கிய புத்தகங்கள், ஒரு சில நூலகங்களில் மட்டுமே கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆராய்ச்சி புத்தகங்கள் கிடைக்காமல் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் இந்த புத்தகத்தை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது.

       இதைத் தொடர்ந்து மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு துறை சார்பில், பல்கலைக் கழக மானிய குழு, ஐ.ஐ.டி., - ஏ.ஐ.சி.டி.இ., இணைந்து, "என். லிஸ்ட்' என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில், 2,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வசதியை பல்கலைக்கழக மானியம் பெறும் கல்லூரி மாணவர்கள் பெறும் வகையில், மின்னணு தகவல்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. 

        இங்குள்ள முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, "யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்படும். இணையதள வசதியை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக ஆராய்ச்சி கட்டுரைகளை பெறலாம். இத் திட்டத்தில் இந்தியா முழுவதும், 600 கல்லூரிகளை இணைக்க திட்டமிட்டு, இதுவரை, 1,500 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





Read more »

சனி, ஜூன் 11, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்துறையும், புதுச்சேரி புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனமும் வெல்டிங் துறையில் முழு ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொகை வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

                  அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புலத்தில் உள்ள உற்பத்தியியல்துறை சார்ந்த உலோகங்கள் இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கழகம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகிய அமைப்புகள் இந்த மையத்தின் ஆராய்ச்சிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 6 கோடி நிதிஉதவி செய்துள்ளன.

             தற்போது வெல்டிங் எலக்ட்ரோட் உற்பத்தி செய்யும் புதுச்சேரி மைலம் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்துடன் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப்பல்கலைக்கழக கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, புதுச்சேரி மைலம் இந்தியா லிட் நிறுவன உரிமையாளர் சிவகுருநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

               இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைலம் இந்திய ரிசர்ச் ஃபெலோஷிப் உதவித்தொகை பெற ஆண்டு தோறும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தெடுக்கப்படும் மாணவருக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ. 18ஆயிரமும், இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ. 20ஆயிரமும், மூன்றாவது வருடத்தில் மாதம் ரூ.22 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இதுதவிர ஆண்டு தோறும் இதர செலவுகளுக்காக ரூ. 50ஆயிரம் வழங்கப்படும். 

                      இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தொழில்துறை சார்ந்த வெல்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கான அனைத்து நிதிஉதவிகளையும் நிதிஉதவியை மைலம் இந்தியா நிறுவனமும், ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அண்ணாமலைப் பல்கலை வழங்கும். உற்பத்தி பொறியியல், உலோக பொறியியல், உலோக இணைப்பு பொறியியல் முதுநிலைப்பட்டம் பெற்று முழுநேர முனைவர் (Ph.D) பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

                இந்நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், உற்பத்தியியல் துறைத்தலைவர் முனைவர் ரகுகாந்தன், உற்பத்தியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மைலம் இந்தியா லிட் நிறுவன இயக்குநர் பென்னத்தூர், ஆலோசகர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




Read more »

வெள்ளி, அக்டோபர் 15, 2010

உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகள்: விண்ணப்பங்களை வரவேற்கிறது "யுனெஸ்கோ'

                              உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு "யுனெஸ்கோ' விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  யுனெஸ்கோவும், ஜப்பான் இளம் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகைத் திட்டமும் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. 

                      சுற்றுச்சூழல், நாடுகளுக்கு இடையேயான கலாசார உறவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பிரச்னைகளுக்கான அமைதித் தீர்வு உள்ளிட்ட தலைப்புகளில் முதுகலை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.  இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  சிறிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

                   இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க தயாராக உள்ளவராகவும், 40 வயதுக்கு குறைவானவராகவும் இருக்க வேண்டும்.  

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை 

புதுதில்லி சாஸ்திரி பவன் 
"சி'-விங்
அறை எண். 203 

                   என்ற முகவரிக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகளை www.unes​co.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior