உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு "யுனெஸ்கோ' விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. யுனெஸ்கோவும், ஜப்பான் இளம் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகைத் திட்டமும் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
சுற்றுச்சூழல், நாடுகளுக்கு இடையேயான கலாசார உறவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பிரச்னைகளுக்கான அமைதித் தீர்வு உள்ளிட்ட தலைப்புகளில் முதுகலை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சிறிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க தயாராக உள்ளவராகவும், 40 வயதுக்கு குறைவானவராகவும் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை
புதுதில்லி சாஸ்திரி பவன்
"சி'-விங்
அறை எண். 203
என்ற முகவரிக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகளை www.unesco.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக