உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 25, 2011

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த வீடியோ காட்சிகள்

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த
வீடியோ காட்சிகள்

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/202948_1793673944_2071142_q.jpg














Read more »

திங்கள், ஜூன் 20, 2011

சூன் 26ல் மெரினா கடற்கரையில் இலங்கை தமிழர் படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவோம்


"சூன் 26ல் மெரினா கடற்கரையில் இலங்கை 

தமிழர் படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி

நினைவேந்துவோம்"








Read more »

வெள்ளி, மே 06, 2011

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம்

 

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு; 

விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

கடலூர்:

              இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய கோரி கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் அறிவுடைநம்பி, செல்லப்பன், ராஜாமுகமது, கதிரவன், பொருளாளர் அன்பழகன், செய்தி தொடர்பாளர் ஆதவன், நகர செயலாளர் பாவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

              இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் படத்தினை வைத்து அவருக்கு சவப்பாடைகட்டி, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கடலூர் உழவர் சந்தையில் இருந்து ஊர்வலம் தொடங்கி அண்ணாபாலம், புதுநகர் காவல் நிலையம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து முடிந்தது. பாரதிசாலை அருகே ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப் பட்டது. ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள் திருமார்பன், பன்னீர்செல்வம், அணிகளின் மாவட்ட செய லாளர்கள் நாகவேந்தன், அரச்செல்வன், புரட்சி வேந்தன், மருதமுத்து, செந்தமிழ்செல்வன், காத்தவராயன், அறவாழி, ரகு, மற்றும் அறிவு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் ஒன்றிய அமைப்பாளர் ஜித்தன் நன்றி கூறினார்

Read more »

சனி, நவம்பர் 27, 2010

கடலூரில்பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு

கடலூர்:


           கடலூரில் பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

             கடலூரில் காமராஜர் பூங்கா அருகே விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் இன்று காலை பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம், வீரவணக்கம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

               நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த பேனரை வைத்ததாக தெரியவந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேனர் வைத்ததாக நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த கடலூர் முதுநகரில் உள்ள ஜலதீபன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரபாகரன் படத்துடன் இருந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

புதன், ஜூலை 21, 2010

இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம்: கருணாநிதி


     
              இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
           இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான் சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள்  முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 
 
பின்னர்  பேசிய அவர்கள், 
 
           இலங்கையில் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்துப்படுவதில் உள்ள சிக்கல் பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தனர். இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்தே மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் அமையும் என்பதால் கடந்த சில நாள்களாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் என முதல்வர் உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பி.க்கள் கூறினர். இலங்கைத் தமிழர் நிலைபற்றி தமக்குத் தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கூறினால், அவற்றை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என முதல்வர் கூறியதாகவும் எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்

             சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது. மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார். இந்திய அரசு ஆறு மாத காலத்துக்கு விசா தந்ததன் அடிப்படையில் அவர் சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்றபோது, தமிழக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு விமான நிலைய வளாகத்துக்குள் சென்றனர். இருந்தாலும் பார்வதி அம்மாளையும், அவருக்குத் துணையாக வந்த பெண்ணையும் நள்ளிரவில் மலேசியாவுக்கே அதிகாரிகள் திரும்ப அனுப்பி வைத்தனர்.

                  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த அதிபர் ராஜபட்ச இந்தியாவுக்கு வந்தால் கோவில்களில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிலையில், பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. மத்திய அரசு விசா கொடுத்திருந்த நிலையில், பார்வதி அம்மாளை அனுமதிக்க கூடாது என்று தமிழக காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனரா என்ற கேள்விக்கு மெüனமே பதிலாக இருக்கிறது.

                   னிக்கிழமை முழுக்க இதுபற்றி பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது பற்றியோ, எதற்காக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பற்றியோ அரசுத் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு ஒரு மாத காலத்துக்கு அந் நாட்டு அரசு விசா அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்திய அரசு உதவிகள் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு, சிகிச்சைக்காக வந்தபோதுகூட, தமிழகத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை என்ற பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமிழக அரசு இதனை செய்திருக்காது: ராமதாஸ்


              விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
               விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். 
 
                    இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.
 
                        நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
 
தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்
 

மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:  
 
               இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரம்: நெடுமாறன், வீரமணி, கிருஷ்ணசாமி கண்டனம்
 

          
               மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
                    பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது.  ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

                              பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:

பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது.

                    இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும்,  அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.

க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:

                   பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜுன் சம்பத் கண்டனம்:

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
           வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல். இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

காவல் துறையினர் கருத்து

               பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது.

                  இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior