உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கான்சாகிப் வாய்க்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கான்சாகிப் வாய்க்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம் அருகே திக்...திக்... பாலம் : பாராமுகமாய் நெடுஞ்சாலைத்துறை

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் செல்லும் பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக காட்டுமன்னார்கோவில் சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலையாகவும் உள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த செட்டிமுட்டு என்ற இடத்தில் கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மிகவும் பழமையான இப்பாலம் பழுதடைந்து பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. முக்கிய சாலையில் உள்ள இப்பாலம் வழியாக அனைத்து விதமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.மோசமான நிலையில் விரிசல் விழுந்துள்ள இந்த பாலத்தால் எதிர் வரும் ஆபத்தை பற்றி கவலைப் படாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடாக புதிய பாலம் கட்டவோ நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாய் இருந்து வருகின்றனர்." வலுவிழந்த பாலம், கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம், வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என்ற எச்சரிக்கை பெயர் பலகையை மட்டும் ஒப் புக்காக வைத்துள்ளனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

சிதம்பரத்தில் 1,800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கிள்ளை,: 

              தெற்கு பிச்சாவரத்தில் பழுதடைந்த உப்பனாற்று வடிகால் ஷட்டர் சீர் செய்யப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் 1,800 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

                 சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டி கடை மடை நீரை தேக்கி டி.எஸ். பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை வருவாய் கிராமங்களை உள்ளடக்கி நடராஜபுரம், கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, இளந்திரிமேடு, பெரிய காரைமேடு, சின்ன காரைமேடு உள்ளிட்ட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,800 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.கான்சாகிப் வாய்க்காலில் இருந்து மாரியப்பா நகர், முத்தையா பிள்ளை வடிகால் வாய்க்கால் மற்றும் திருவக்குளம் வடிகால் வாய்க்கால் வழியாக செல்லும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் தேக்கி அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

                 கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மேட்டுப் பகுதியினர் "தை' பட்டத்திலும், பள்ளப் பகுதியில் உள்ளவர்கள் "நவரை' பட்டத்திலும், விவசாயிகளுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியில் விவசாய நிலங்கள் உவர்ப்பு தன்மையாக மாறியது. தற்போது நிலத்தடியில் 10 அடி ஆழத் தில் நீரோட்டம் இருப்பதாலும், கூடுதல் ஆழத்தில் பூமியைத் தோண்டினால் உவர்ப்பு நீர் கிடைப்பதால் போர்வெல் அமைத்தோ, அல்லது கிணற்று பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யவோ முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கு மேட்டூரில் இருந்து கான்சாகிப் வாய்க்கால் வழியாக வரும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் ஏரியில் "ஷட்டர்' மூலம் தேக்கி வைக்கப்படுகிறது.

                 அவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் உபரி நீரையும், மழைக் காலங்களில் தேங்கும் நீரை வெளியேற்ற கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் டி.எஸ். பேட்டை சாலையில் தெற்கு பிச்சாவரத்தில் உள்ள உப்பனாற்றில் 12 ஷட்டர்கள் கொண்ட"பாலம்' கட்டப்பட்டது. இதன் மூலம் மழைக் காலங்களில் தேங்கும் நீர் வடிகாலில் திறந்து விடப் படும். ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.கடந்த சில ஆண்டுகளாக "ஷட்டர்' பழுதடைந்து, பராமரிப்பில்லாமல் சேதமடைந்துள்ளது. "ஷட்டர் வீல்' செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும், நடை பாதையில் கால் வைத்தால் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும் கொட்டுகிறது. ஷெட்டரை சுற்றியுள்ள பக்கவாட்டில் உள்ள பாலமும் சேதமடைந்து, தடுப்பு கட்டைகளும் உடைந்து தொங்கிறது. ஒவ்வொரு ஷட்டருக்கும் இடையே அதிகளவில் இடைவெளி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

               ஷட்டர் பழுதானதால் விவசாயத்திற்கு தேக்கி வைக்கப் பட்டுள்ள தண்ணீர் கசிந்து உப்பனாற்று வடிகாலில் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமலும், மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமலும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏரியும் தூர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவரை அகற்றி விட்டு, பாலத்தையும், ஷட்டரையும் சரிசெய்யா விட்டால் விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அத்துடன் இப் பாலத்தின் வழியில் தெற்கு பிச்சாவரம் உள் ளிட்ட கிராமங்களுக்கு நடராஜபுரத்தில் இருந்து குடிநீர் செல்லும் பைப் லைனும் துண்டிக்கப்படும் அபாய நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை புதுப்பிப்பதுடன், பழுதடைந் துள்ள ஷட்டரையும் சரி செய்து. லஸ்கர் (நீர்காவலர்) பணியிடத்தை நிரப்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

திங்கள், ஜூன் 28, 2010

சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரும் பணி

கிள்ளை : 

                 சிதம்பரம் அருகே 19 லட்சம் ரூபாய் செலவில் கான்சாகிப் வாய்க்கால் ஆழப்படுத்தி தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நக்கரவந்தன்குடியில் இருந்து பொன்னந்திட்டு வரை 20 வருவாய் ஊராட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் மூலம் இந்த பகுதியில் 9,994 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டதில் இருந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

                  அதனால் மேட்டுப் பகுதியில் உள்ளவர்கள் "தை' பட்டத்திலும், பள்ளக்கையில் இருப்பவர்கள் "நவரை' சாகுபடியையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால் கான்சாகிப் வாய்க்கால் இருபக்க கரையும் தூர்ந்து புதர்மண்டி, ஆகாயத் தாமரை செடி மண்டி கிடந்ததால் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நீர் வழி நடை பயணம் மேற்கொண்ட அப் போதை கலெக்டர் ராஜேந் திர ரத்னுவிடம் சிதம்பரம் கிழக்குப் பகுதி விவசாயிகள் கான்சாகிப் வாய்க்கால் பகுதியை வெட்டி கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளை தூர்வாரும் பணி மூலம் 56 பணிகளுக்கு 2 கோடியே 50 லட் சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

                   இதில் ஒன்றான சிதம்பரம் அடுத்த திருவக்குளம் கலுங்கு மேட் டில் இருந்து நக்கரவந் தன்குடி, பின்னத்தூர், நஞ்சைமகத்துவாழ்க்கை வழியாக காரைக்காட்டு சாவடி வெள்ளாற்று (லாக்கு) வரை 11 கி.மீ., தூரம் 19 லட்சம் ரூபாய் செலவில் கான் சாகிப் வாய்க்காலை ஆழப்படுத்தி இரு பக்கம் உள்ள கரைகளை உயர்த் தும் பணி துவங்கியது. இதனால் விவசாயத்திற்கு தட்டுப்பாடில்லாமல் தண் ணீர் கிடைப்பதுடன், மழைக் காலங்களில் சிதம்பரம் பகுதியில் தேங் கும் தண்ணீர் எளிதில் வடிய வாய்ப்பாக இருக்கும்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

கான்சாகிப் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலப்பு: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியள
சிதம்பரம்:
                 சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.
                   இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது.  இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பழுதடைந்துவிட்டதால் பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன. 
                அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது. சிதம்பரம் நகரில் ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் பழுதடைந்துவிட்டதால். ரூ.38 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பணிக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்பதால் தற்போது அப்பணியை செயல்படுத்த ரூ.42 கோடியாக தொகை உயர்த்தப்பட்டது. அப்படியும் இன்று வரை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. தற்போது பாதாள சாக்கடை நீர் ஆங்காங்கே திறந்தவெளி வடிகாலில் வெட்டி விடப்பட்டுள்ளன. இந்த புதை சாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் கொண்டுவிடப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
                    மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது. இந்த நீரை கொண்டுதான் விவசாயிகள் நவரைப்பட்ட சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior