உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 05, 2012

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி 16 சாரணர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கும் விழா

கடலூர் :

        கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்த விழாவில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கிப் பாராட்டினார்.
 
       டில்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2010-11ம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான விருதுகளை வழங்கினார். அதில் கடலூர் மாவட்டத்திற்கு 25 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டதில் இந்திய அளவில் அதிகளவில் 16 ஜனாதிபதி விருதுகளை கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியின் 16 சாரண மாணவர்கள் பெற்றனர். இவ்விருதுகளை சாரண மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் விழா செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் செயின்ட் ஜோசப் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், மாவட்ட சாரண செயலர் இளையகுமார், அமைப்பு ஆணையர் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.







Read more »

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவு



கடலூர் : 

           கடலூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவன், மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்த சின்னமாறன் ஓடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். உளுந்தூர்பேட்டையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்; இவரது மகன் ஜாய்ஸ் ஆல்வின் போஸ்(12); கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் விடுதியில் தங்கி, 6ம் வகுப்பு படித்து வந்தான்.

               நேற்று மாலை, 3.30 மணிக்கு, ஜாய்ஸ் ஆல்வின் போஸ், விடுதியில் மயங்கி விழுந்தான். கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான். கடலூர் புதுநகர் போலீசார், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், திடீர் பதட்டம் நிலவியது.

மாணவனின் தந்தை ஆரோக்கியதாஸ் கூறியது: 

         நேற்று (நேற்று முன்தினம்) மாலை ஜாய்ஸ் ஆல்வின் போஸ் எனக்கு போன் செய்து, உடல்நிலை சரியில்லை என கூறினான். அப்போது பணியில் இருந்ததால் நாளை வருகிறேன் என்றேன். இன்று (நேற்று) மாலை கடலூர் வந்த போது, பள்ளி முதல்வர் எனக்கு போன் செய்து, உங்கள் மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்றார். அங்கு சென்று பார்த்தபோது என் மகன் இறந்து விட்டான். 

             கடந்த வாரம் என் மனைவி மகனை பார்க்க வந்தபோது அவரிடம், உடனிருந்த மாணவர்கள், விடுதி வார்டன், ஜாய்ஸ் ஆல்வின் போசை அடித்ததாக கூறியுள்ளனர். இதனால் என் மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறினார். 

பள்ளி முதல்வர் ஆக்னல் கூறுகையில், 

                "விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். ஜாஸ் ஆல்வின் போஸ் இன்று (நேற்று) பள்ளி ஆரம்பித்த பின் உடல் நிலை சரியில்லை என ஆசிரியரிடம் கூறி விடுமுறை எடுத்துள்ளான். இந்நிலையில், அவன், விடுதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளான். உடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்' என்றார்.

Read more »

திங்கள், மார்ச் 15, 2010

செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

கடலூர் :

                கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் பெற்றோர் தின விழா நடந்தது.

           புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அற்புதமேரி தலைமை தாங்கினார். புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதிய பள்ளி கட்டடத் திற்கு சிறப்பு ஆராதனை நடத்தினார். புதுச்சேரி இமாகுலேட் மதர் சுப்ரியர் ஜான் பிரிட்டோ மேரி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மாலையில் நடந்த பெற்றோர் தின விழாவிற்கு  கல்வி ஆலோசகர் டையஸ்கோர மேரி அல்போன்சா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை அற்புத மேரி, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட  அன்னை மரியா எபிபெனி முன்னிலை வகித்தனர். பாதிரிக்குப்பம்  ஊராட்சி தலைவர் கோமதி, சிவலிங்கம், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் ரமேஷ் பரிசு வழங்கினார். மூத்த ஆசிரியர் விஜயலட்சுமி நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior