உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், பிப்ரவரி 01, 2011

கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவுகடலூர் : 

           கடலூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவன், மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்த சின்னமாறன் ஓடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். உளுந்தூர்பேட்டையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்; இவரது மகன் ஜாய்ஸ் ஆல்வின் போஸ்(12); கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் விடுதியில் தங்கி, 6ம் வகுப்பு படித்து வந்தான்.

               நேற்று மாலை, 3.30 மணிக்கு, ஜாய்ஸ் ஆல்வின் போஸ், விடுதியில் மயங்கி விழுந்தான். கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான். கடலூர் புதுநகர் போலீசார், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், திடீர் பதட்டம் நிலவியது.

மாணவனின் தந்தை ஆரோக்கியதாஸ் கூறியது: 

         நேற்று (நேற்று முன்தினம்) மாலை ஜாய்ஸ் ஆல்வின் போஸ் எனக்கு போன் செய்து, உடல்நிலை சரியில்லை என கூறினான். அப்போது பணியில் இருந்ததால் நாளை வருகிறேன் என்றேன். இன்று (நேற்று) மாலை கடலூர் வந்த போது, பள்ளி முதல்வர் எனக்கு போன் செய்து, உங்கள் மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்றார். அங்கு சென்று பார்த்தபோது என் மகன் இறந்து விட்டான். 

             கடந்த வாரம் என் மனைவி மகனை பார்க்க வந்தபோது அவரிடம், உடனிருந்த மாணவர்கள், விடுதி வார்டன், ஜாய்ஸ் ஆல்வின் போசை அடித்ததாக கூறியுள்ளனர். இதனால் என் மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறினார். 

பள்ளி முதல்வர் ஆக்னல் கூறுகையில், 

                "விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். ஜாஸ் ஆல்வின் போஸ் இன்று (நேற்று) பள்ளி ஆரம்பித்த பின் உடல் நிலை சரியில்லை என ஆசிரியரிடம் கூறி விடுமுறை எடுத்துள்ளான். இந்நிலையில், அவன், விடுதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளான். உடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior