உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பென்னாகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பென்னாகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 17, 2010

பென்னாகரம் தேர்தலுக்கு வசூல் வேட்டை 'ஆட்டய' போடும் அ.தி.மு.க., புள்ளிகள்

கடலூர்:

                      பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் அளிக்கும்  நிதியை ஒன் றிய, நகர நிர்வாகிகளிடம் மிரட்டி பணத்தை "கறப்பதால்' கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் முஸ்தீபு காட்டி வருகிறது.

                       அந்தந்த கட்சிகளும் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமையிடம் எதிர்நோக்கியிருக்க அ.தி.மு.க., தலைமையோ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வசூல் செய்யத்துவங்கியுள்ளது.

                         இதற்காக சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்து கூட்டம் நடத் தப்பட்டது. ஜெ., ஆணைக்கிணங்க நோட்டு வைக்கப்பட்டது.  பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக யார் யார் எவ்வளவு நிதி தர முடியுமோ அந்த தொகையை பெயருடன் நோட்டில் எழுதி கையெழுத்து இட வேண்டும்.  வசூலாகும் தொகை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எழுதி கையெழுத்திட்டனர்.  அவ்வாறு எழுதியதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் தேறியது.  மாவட்ட செயலர்கள் ஜம்பமாக நோட்டில் 5 லட்சம், 6 லட்சம் ரூபாய் என எழுதி விட்டு வெளியே வந்ததும் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளிடம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தர வேண டும் என  கட்டளையிட்டுள்ளனர். இந்த தொகையை கொடுக்கவில்லை என்றால் பதவிக்கு கல்தா நிச்சயம் என்று மிரட்டியுள்ளனர்.  மாவட்ட செயலர்கள் எழுதி கையெழுத்து போட்ட தொகையை விட இரு மடங்காக எங்களிடம் "கறந்து' "ஆட்டய' போட நினைக்கின்றனர் என கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Read more »

வெள்ளி, மார்ச் 12, 2010

சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழு

சிதம்பரம்:

                    சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து பிரசாரம் செய்வது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 1986 முதல் 1998 வரை 50 ஆயிரம் வழக்குகளில் சிக்கி சிறைபட்ட வன்னியர்களை மிகவும்  பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர்களை அரசு இட ஒதுக்கீடு தியாகிகளாக அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கவும்,  நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர் வரையும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கவும்  2010ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

வியாழன், மார்ச் 11, 2010

திரைப்பட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்



கடலூர்:

               கடலூர் திரைப்பட இயக்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

              தமிழகத்தில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள்,​​ இளம் தலைமுறையினரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில்,​​ ஊடகங்களின் பாலியல் செய்தி வன்முறை,​​ அரசியல் தலைவரின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய காட்சி ஊடகம் மீது தாக்குதல்,​​ பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் காரில் சோதனை,​​ முன்னாள் அமைச்சர் அன்புமணியின் காரை வழிமறித்துச் சோதனை,​​ பென்னாகரம் பா.ம.க.​ தேர்தல் பணிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

                கடலூர் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் திரைப்பட இயக்கத் தலைவர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ செயற்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து,​​ தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ திரைப்பட இயக்குநர்கள் தமிழாகரன்,​​ தங்க வெங்கடேசன்,​​ உதவி இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் திரைப்பட இயக்க நிர்வாகிகள் வேணுநாதன்,​​ பட்டுராஜா,​​ தனம் மணியரசு உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior