சிதம்பரம்:
சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து பிரசாரம் செய்வது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 1986 முதல் 1998 வரை 50 ஆயிரம் வழக்குகளில் சிக்கி சிறைபட்ட வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர்களை அரசு இட ஒதுக்கீடு தியாகிகளாக அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கவும், நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர் வரையும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கவும் 2010ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக