கடலூர்:
பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் அளிக்கும் நிதியை ஒன் றிய, நகர நிர்வாகிகளிடம் மிரட்டி பணத்தை "கறப்பதால்' கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் முஸ்தீபு காட்டி வருகிறது.
அந்தந்த கட்சிகளும் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமையிடம் எதிர்நோக்கியிருக்க அ.தி.மு.க., தலைமையோ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வசூல் செய்யத்துவங்கியுள்ளது.
இதற்காக சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்து கூட்டம் நடத் தப்பட்டது. ஜெ., ஆணைக்கிணங்க நோட்டு வைக்கப்பட்டது. பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக யார் யார் எவ்வளவு நிதி தர முடியுமோ அந்த தொகையை பெயருடன் நோட்டில் எழுதி கையெழுத்து இட வேண்டும். வசூலாகும் தொகை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எழுதி கையெழுத்திட்டனர். அவ்வாறு எழுதியதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் தேறியது. மாவட்ட செயலர்கள் ஜம்பமாக நோட்டில் 5 லட்சம், 6 லட்சம் ரூபாய் என எழுதி விட்டு வெளியே வந்ததும் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளிடம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தர வேண டும் என கட்டளையிட்டுள்ளனர். இந்த தொகையை கொடுக்கவில்லை என்றால் பதவிக்கு கல்தா நிச்சயம் என்று மிரட்டியுள்ளனர். மாவட்ட செயலர்கள் எழுதி கையெழுத்து போட்ட தொகையை விட இரு மடங்காக எங்களிடம் "கறந்து' "ஆட்டய' போட நினைக்கின்றனர் என கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

பென்னாகரம் தேர்தல் முடிவுகள்
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html