கடலூர்:
கடலூர் திரைப்பட இயக்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள், இளம் தலைமுறையினரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில், ஊடகங்களின் பாலியல் செய்தி வன்முறை, அரசியல் தலைவரின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய காட்சி ஊடகம் மீது தாக்குதல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காரில் சோதனை, முன்னாள் அமைச்சர் அன்புமணியின் காரை வழிமறித்துச் சோதனை, பென்னாகரம் பா.ம.க. தேர்தல் பணிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் திரைப்பட இயக்கத் தலைவர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து, தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர்கள் தமிழாகரன், தங்க வெங்கடேசன், உதவி இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் திரைப்பட இயக்க நிர்வாகிகள் வேணுநாதன், பட்டுராஜா, தனம் மணியரசு உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக