உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




முடிகண்டநல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முடிகண்டநல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 21, 2010

சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்கத்திற்கு அனுமதியின்றி மணல் நடவடிக்கை கோரி கலெக்டருக்கு விவசாயிகள் மனு

சேத்தியாத்தோப்பு: 

             மணல் குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

இதுகுறித்து துல்லிய பண்ணை  விவசாயிகள் சங்கத் தலைவர் கூடலையாத்தூர் அப்பாதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

            காட்டுமன்னார்கோயில் வட்டம் முடிகண்டநல்லூர் இணைப்பு சாலையில் காவாலகுடி, கூடலையாத்தூர் வரை சுமார் 3 கி.மீ.,  தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க பணியின் போது 3 மீ., நீளம் 3 மீ., ஆழம் வரை தோண் டப்பட்டது. பின்னர் மணல் குவாரியிலிருந்து மணல் கொண்டு வந்து அந்த பள்ளங்கள் மூடப்பட்ள்ளது.

             இதனை சரிசெய்ய 2 ஆயிரம் லாரி மணல் கொட்டப்பட்டுள்ளது. இந்த மணல் அரசின் அனுமதியின்றி எடுத்து கொட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு இம்மணல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விலை நிர்ணயம் செய்து மணல் விற்றனரா அல்லது அதிகாரிகளின் புரிதல் தன்மையால் இலவசமாக கொடுத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், ஜூன் 01, 2010

கந்தலாகிப்போன கானூர் சாலை: பொதுமக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச்சாலை கந்தலாகி போனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு கானூர் மற்றும் பாளையங்கோட்டை வழி சாலை என இருசாலைகள் உள்ளன. இதில் கானூர் சாலை குமாரகுடியில் துவங்கி சாத்தாவிட்டம் கிராமம் வரை குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் கானூர், பேரூர், வலசக்காடு, கூடலையாத்தூர், ஸ்ரீமுஷ்ணம், காவலாக்குடி, பேரூர், குறிஞ்சிக்குடி, முடிகண்டநல்லூர், சாந்தி நகர், மழவராயநல்லூர், நாச்சியார் பேட்டை, தேத்தாம் பட்டு, நகரப்பாடி, உள்பட்ட 25க் கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை சீர்கேட்டால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் அடிக்கடி இச்சாலையை சீரமைப்பதாக கூறினாலும் சாலை மட்டும் எப்போதும் கந்தலாகியே கிடக்கிறது. ஒவ்வொரு முறை சாலை சீரமைக்கப்படும் போதும் சாலை தரமாக போடப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுவது தொடர்கதையாக உள்ளது. வரும் காலங்களிலாவது சாலைகளை தரமாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சனி, ஏப்ரல் 03, 2010

முடிகண்டநல்லூரில் மனைப்பட்டா வழங்கும் விழா


ஸ்ரீமுஷ்ணம் : 

                    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த 30 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் பணி ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தில் நடந்தது. காட்டுமன்னார் கோயில் தாசில்தார் வீரபாண்டியன் மனைப்பட்டா வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வேல்முருகன், மயில் வாகனன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior