உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

கந்தலாகிப்போன கானூர் சாலை: பொதுமக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச்சாலை கந்தலாகி போனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு கானூர் மற்றும் பாளையங்கோட்டை வழி சாலை என இருசாலைகள் உள்ளன. இதில் கானூர் சாலை குமாரகுடியில் துவங்கி சாத்தாவிட்டம் கிராமம் வரை குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் கானூர், பேரூர், வலசக்காடு, கூடலையாத்தூர், ஸ்ரீமுஷ்ணம், காவலாக்குடி, பேரூர், குறிஞ்சிக்குடி, முடிகண்டநல்லூர், சாந்தி நகர், மழவராயநல்லூர், நாச்சியார் பேட்டை, தேத்தாம் பட்டு, நகரப்பாடி, உள்பட்ட 25க் கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை சீர்கேட்டால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் அடிக்கடி இச்சாலையை சீரமைப்பதாக கூறினாலும் சாலை மட்டும் எப்போதும் கந்தலாகியே கிடக்கிறது. ஒவ்வொரு முறை சாலை சீரமைக்கப்படும் போதும் சாலை தரமாக போடப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுவது தொடர்கதையாக உள்ளது. வரும் காலங்களிலாவது சாலைகளை தரமாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior