சேத்தியாத்தோப்பு:
மணல் குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.
இதுகுறித்து துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் கூடலையாத்தூர் அப்பாதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
காட்டுமன்னார்கோயில் வட்டம் முடிகண்டநல்லூர் இணைப்பு சாலையில் காவாலகுடி, கூடலையாத்தூர் வரை சுமார் 3 கி.மீ., தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க பணியின் போது 3 மீ., நீளம் 3 மீ., ஆழம் வரை தோண் டப்பட்டது. பின்னர் மணல் குவாரியிலிருந்து மணல் கொண்டு வந்து அந்த பள்ளங்கள் மூடப்பட்ள்ளது.
இதனை சரிசெய்ய 2 ஆயிரம் லாரி மணல் கொட்டப்பட்டுள்ளது. இந்த மணல் அரசின் அனுமதியின்றி எடுத்து கொட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு இம்மணல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விலை நிர்ணயம் செய்து மணல் விற்றனரா அல்லது அதிகாரிகளின் புரிதல் தன்மையால் இலவசமாக கொடுத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக