உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 31, 2011

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் மீது தாக்கு






சிதம்பரம்: 

           சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடிதோப்பைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி சகுந்தலா (65). உடல்நிலை சரியில்லாமல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலாவின் உறவினர்கள் சிலர், அங்கு பணியில் இருந்த டாக்டர் இளஞ்செழியன், பிசியோதெரபி டாக்டர் நந்தகுமார் ஆகியோரைத் தாக்கினர். 

               டாக்டர்கள் தாக்கப்பட்டதால் சக டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திரண்டு, மருத்துவ கண்காணிப்பாளர் அறை முன் கூடி, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என, ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி., நடராஜ், மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்களை மருத்துவ கண்காணிப்பாளர் விஸ்வநாதன், டி.எஸ்.பி., மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்: ஆயிரம் பேர் பங்கேற்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார மையத்தில் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை  கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். 

                  இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பர், டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் எத்திராஜ், டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரம் பேர் பங்கேற்று பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதத்துக்கு அணியும் மைக்ரோ செல்லுலார் ரப்பர் காலணிகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். சர்க்கரை நோயால் அவதியுறும் நோயாளிகள் விழிப்புணர்வு பெறும் வகையில் உணவு பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் எது, சாப்பிடக்கூடாதது எது என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

Read more »

திங்கள், அக்டோபர் 04, 2010

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி வெள்ளி விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தோற்றம்.
 
சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா வருகிற அக்டோபர் 3,4,5,6 தேதிகளில் கொண்டாடப்படுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 
 
                     பிற்படுத்தப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் நலன் கருதி இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 1985-ம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.தற்போது 25-வது ஆண்டு நிறைவு விழாவை வெள்ளி விழாவாக அக்டோபர் 3-6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறோம். அக்டோபர் 3-ம் தேதி சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. நகர்ப்புற சுகாதார மையத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்புக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
   
                       அக்டோபர் 4-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இணைவேந்தர் மற்றும் துணைவேந்தர் பெயர்களில் தலா 1 லட்சம் செலவில் வெள்ளி விழா அறக்கட்டளை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 5-ம் தேதி காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா நடைபெறுகிறது. இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார். பி.சி.ராய் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற மூத்த பேராசிரியர் டாக்டர் என்.ரங்கபாஷ்யம் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். 
 
                     முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு வாழ்த்துரையாற்றுகிறார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் வரவேற்கிறார். அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

வெள்ளி, மே 07, 2010

முதுகலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம்:

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2010-11 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்து மருத்துவ உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பார் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

பொது அறிவிற்கு:
வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி - டூரான்டோ கப் போட்டி

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior