சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார மையத்தில் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பர், டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் எத்திராஜ், டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரம் பேர் பங்கேற்று பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதத்துக்கு அணியும் மைக்ரோ செல்லுலார் ரப்பர் காலணிகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். சர்க்கரை நோயால் அவதியுறும் நோயாளிகள் விழிப்புணர்வு பெறும் வகையில் உணவு பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் எது, சாப்பிடக்கூடாதது எது என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக