உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மார்ச் 31, 2011

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் மீது தாக்கு


சிதம்பரம்: 

           சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடிதோப்பைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி சகுந்தலா (65). உடல்நிலை சரியில்லாமல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலாவின் உறவினர்கள் சிலர், அங்கு பணியில் இருந்த டாக்டர் இளஞ்செழியன், பிசியோதெரபி டாக்டர் நந்தகுமார் ஆகியோரைத் தாக்கினர். 

               டாக்டர்கள் தாக்கப்பட்டதால் சக டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திரண்டு, மருத்துவ கண்காணிப்பாளர் அறை முன் கூடி, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என, ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி., நடராஜ், மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்களை மருத்துவ கண்காணிப்பாளர் விஸ்வநாதன், டி.எஸ்.பி., மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior