உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வருங்கால வைப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருங்கால வைப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கம்

காட்டுமன்னார்கோவில் : 

           காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.

               தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்காக ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் நடந்தது. சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 

            சத்துணவு அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் சத்துணவு ஊழியர்களை ஒருங்கிணைத்து விண்ணப்பங்கள் பெற்றனர். ஒன்றியத்துக்குட்பட்ட 55 பஞ்சாயத்துகளில் உள்ள 123 பள்ளிகளில் இருந்து சத்துணவு பணியாளர்கள் 330 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பொறுப்பாளர்கள், சமையலர், உதவியாளர் என அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. 





Read more »

சனி, ஜனவரி 29, 2011

3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாத பி.எப். கணக்குக்கு ஏப்ரல் 1 முதல் வட்டி கிடையாது

               தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.) செயல் படுத்தப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்ற பிறகு பி.எப். கணக்கை முடித்து பணம் பெறாமலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பி.எப். கணக்கை மாற்றாமலும் இருந்து வருகிறார்கள்.

              இருந்தாலும் பி.எப். கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி (9 1/2 சதவீதம்) சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பயன் படுத்தப்படாத மற்றும் வேறு கணக்குக்கு மாற்றப்படாத பி.எப். கணக்குகள் 1.4.2011 முதல் செயல்பாடு இல்லாமல் போய்விடும் என்றும், அந்த கணக்குகளுக்கு 1.4.2011-லிருந்து எவ்வித வட்டியும் வழங்கப்படாது என்றும் சென்னை மண்டல பி.எப். ஆணையாளர் கே.வி.சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

                 எனவே, 3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பி.எப். கணக்குகளை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு சந்தாதாரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

வெள்ளி, ஜூலை 23, 2010

வருங்கால வைப்பு நிதி விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம்


               ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்.எம்.எஸ்., வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனம் எஸ்.எம்.எஸ்., மூலம் ஊழியர்கள், உறுப்பினர்கள், பென்ஷன் வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த சேவை மூலம் பென்ஷன் கடன் விண்ணப்பம் மற்றும் செட்டில்மென்ட் குறித்த நிலை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

            நிறுவனங்கள் பணம் செலுத்திய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையை பெற, உறுப்பினர்கள் தங்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் தங்கள் ஊழியர்களின் மொபைல் எண்கள் குறித்த விவரங்களை உரிய நபரின் கையெழுத்துடன், மண்டல அலுவலகங்கள் அல்லது துணை மண்டல அலுவலகங்களில் தாக்கல் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மேலும் விவரங்களை http://www.epfindia.nic.in.., http://www.epfochennai.tn.nic.in.. என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம்

                  வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 கே.வி. சர்வேசுவரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                          வருங்கால வைப்பு நிதி ஆணையம் தனது சந்தாதாரர்களுக்கான பண விநியோகச் சேவையை கணினிமயமாக்கி உள்ளது. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மற்றும் இணைய வசதியுடன் http://www.epfochennai.tn.nic.in/obcb/oblogin.aspx கூடிய வங்கி சேவையின் பயன்களை சந்தாதாரர்களுக்கு வழங்கும் வகையில் தடையற்ற முறையில் அவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு உடனடியாக பண பரிமாற்றம் செய்து வரவு வைக்கும் திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தாதாரர்களுக்கு வங்கியில் அவர்களது பெயரில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். தங்களது கையொப்பமிட்ட ரத்து செய்யப்பட்ட காசோலை (காசோலை எண் சான்றுக்காக) அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பிரத்யேக இணையதளம் மூலம் சந்தாதாரர்கள் தங்களது (வருங்கால வைப்பு நிதி) கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரங்களை அறியலாம். இதற்காக சந்தாதாரர் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக சங்கேத வார்த்தை (பாஸ்வேர்ட்) வழங்கப்பட்டு, அவரால் மட்டுமே அதை செயல்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை காக்கப்படும். ரகசிய சங்கேத வார்த்தை குறித்து மேலும் விவரங்களை அறிய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலரை நேரில் அணுகலாம்.

3 ஆண்டுகள் செயல்படாத கணக்குகளுக்கு...: 

                       தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்படாத, கைவிடப்பட்ட கணக்குகளில், வருங்கால வைப்பு நிதி விவரங்களுக்கு (செட்டில்மெண்ட்) தீர்வு காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சந்தாதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் அதற்கான படிவங்களை வேலை கொடுப்பவர் (எம்ப்ளாயர்) மூலம் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் தங்களது அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் செயல்படாத நிலையில் இருந்த கணக்கில் இருப்பில் இருந்த தொகையை இப்போது நடப்பில் உள்ள கணக்குக்கு மாற்றவும், எடுக்கவும் முடியும். சந்தாதாரர் காலமானால், அவரது சார்பில் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர் என்றார் கே.வி. சர்வேசுவரன்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior