உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம்

                  வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 கே.வி. சர்வேசுவரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                          வருங்கால வைப்பு நிதி ஆணையம் தனது சந்தாதாரர்களுக்கான பண விநியோகச் சேவையை கணினிமயமாக்கி உள்ளது. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மற்றும் இணைய வசதியுடன் http://www.epfochennai.tn.nic.in/obcb/oblogin.aspx கூடிய வங்கி சேவையின் பயன்களை சந்தாதாரர்களுக்கு வழங்கும் வகையில் தடையற்ற முறையில் அவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு உடனடியாக பண பரிமாற்றம் செய்து வரவு வைக்கும் திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தாதாரர்களுக்கு வங்கியில் அவர்களது பெயரில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். தங்களது கையொப்பமிட்ட ரத்து செய்யப்பட்ட காசோலை (காசோலை எண் சான்றுக்காக) அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பிரத்யேக இணையதளம் மூலம் சந்தாதாரர்கள் தங்களது (வருங்கால வைப்பு நிதி) கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரங்களை அறியலாம். இதற்காக சந்தாதாரர் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக சங்கேத வார்த்தை (பாஸ்வேர்ட்) வழங்கப்பட்டு, அவரால் மட்டுமே அதை செயல்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை காக்கப்படும். ரகசிய சங்கேத வார்த்தை குறித்து மேலும் விவரங்களை அறிய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலரை நேரில் அணுகலாம்.

3 ஆண்டுகள் செயல்படாத கணக்குகளுக்கு...: 

                       தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்படாத, கைவிடப்பட்ட கணக்குகளில், வருங்கால வைப்பு நிதி விவரங்களுக்கு (செட்டில்மெண்ட்) தீர்வு காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சந்தாதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் அதற்கான படிவங்களை வேலை கொடுப்பவர் (எம்ப்ளாயர்) மூலம் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் தங்களது அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் செயல்படாத நிலையில் இருந்த கணக்கில் இருப்பில் இருந்த தொகையை இப்போது நடப்பில் உள்ள கணக்குக்கு மாற்றவும், எடுக்கவும் முடியும். சந்தாதாரர் காலமானால், அவரது சார்பில் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர் என்றார் கே.வி. சர்வேசுவரன்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior