உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 12, 2010

திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கும் பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திட்டக்குடி : 

              திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

                விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைச்செருவாய், ஆக்கனூர், பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மதிய உணவு மற்றும் பள்ளி இடைவேளைகளில் வெளியில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக வேகத்தடை இல்லை. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது. 

                 அப்போதைய ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், பள்ளி முன் நெடுஞ்சாலையில் இரும்பு போல்டு மூலம் பிணைக்கப்பட்ட ரப்பரால் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் அதிகரிப்பாலும், கனரக வாகனங்களால் ரப்பர் வேகத்தடை பெயர்ந்ததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

Read more »

புதன், ஜூன் 02, 2010

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலபணியால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி : 

                   பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பால கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட்டில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இறையூர், பொன்னேரி, அம்பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. தற்போது மேம் பாலம் கட்டுவதற்காக பில்லர் அமைக்கும் பணி ராட்சத இயந்திரங்கள் மூலம் நடந்து வருகிறது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இருபுறமும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக் கப்பட்டுள்ள இரும்பு பொருட்கள், மணல் மேடுகள், ராட்சத இயந்திரங்களால் வாகனங்கள் எதிரெதிர் திசை நோக்கி விரைவாக செல்ல முடியவில்லை.

                      மேம்பால கட்டுமான பணி துவங்கும் முன் இறையூர் கைகாட்டி, கொத்தட்டை சாலை வழியாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று விருத்தாசலம் நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வழியும், கட்டுமான பணி நடைபெறும் பகுதி வழியாக ஒரு வழி என இருவழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இதுவரை மாற்று வழி ஏற்படுத்தாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு நேர விரயத்தால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும்.

Read more »

செவ்வாய், மே 18, 2010

திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 'மெகா' சைஸ் பள்ளம்

திட்டக்குடி: 

              திட்டக்குடி அருகே மரத்தின் நிழலில் மறைந்துள்ள 'மெகா' சைஸ் பள்ளத்தில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

               விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியே புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட் டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர பெண்ணாடம் சர்க்கரை, சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், பள்ளி, கல் லூரி வாகனங்களும் செல்கின்றன. இவ்வழியாக விருத்தாசலம், பெண்ணாடம், ராமநத்தம், பெரம்பலூர் என குறிப் பிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் நேர விரயம் கருதி செல்கின்றனர்.

                   இந்நிலையில் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ் சாலை குண்டும், குழியுமாக ஆங் காங்கே பெயர்ந்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திட்டக்குடி முதல் விருத்தாசலம் வரை சாலை முற்றிலுமாக போக்குவரத் திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆவினங்குடி அரசு மணல் குவாரி அருகில் நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை பேட்ஜ் ஒர்க் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior