உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலபணியால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி : 

                   பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பால கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட்டில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இறையூர், பொன்னேரி, அம்பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. தற்போது மேம் பாலம் கட்டுவதற்காக பில்லர் அமைக்கும் பணி ராட்சத இயந்திரங்கள் மூலம் நடந்து வருகிறது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இருபுறமும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக் கப்பட்டுள்ள இரும்பு பொருட்கள், மணல் மேடுகள், ராட்சத இயந்திரங்களால் வாகனங்கள் எதிரெதிர் திசை நோக்கி விரைவாக செல்ல முடியவில்லை.

                      மேம்பால கட்டுமான பணி துவங்கும் முன் இறையூர் கைகாட்டி, கொத்தட்டை சாலை வழியாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று விருத்தாசலம் நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வழியும், கட்டுமான பணி நடைபெறும் பகுதி வழியாக ஒரு வழி என இருவழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இதுவரை மாற்று வழி ஏற்படுத்தாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு நேர விரயத்தால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior