உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை

சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக சிதம்​ப​ரம் அருகே உள்ள கடற்​கரை கிரா​மங்​க​ளில் நவம்​பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 30-ம் தேதி வரை புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​று​கி​றது. எனவே அப்​ப​குதி மக்​கள் ஏற்​கெ​னவே கணக்​கெ​டுப்பு முடி​வுற்று அதற்​காக வழங்​கப்​பட்ட ஒப்​பு​தல் ரசீதை புகைப்​ப​டம் எடுக்​கும் மையத்​துக்கு எடுத்​துச் சென்று தங்​க​ளது கைரே​கையை பதிவு செய்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்ள வேண்​டும் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​ ​ கடற்​கரை பாது​காப்பை பலப்​ப​டுத்​தும் ஒர் அங்​க​மாக கடற்​கரை கிரா​மங்​க​ளில் முதல் கட்​ட​மாக தேசிய மக்​கள் தொகை பதி​வேட்டை தயா​ரிக்க இந்​திய அரசு தீர்​மா​னித்​துள்​ளது. அதில் ஒவ்​வொரு தனி நப​ரைப் பற்​றிய புள்ளி விப​ரங்​கள்,​ 15 வயது,​ அதற்கு மேற்​பட்ட வய​து​டைய நபர்​க​ளி​டம் புகைப்​ப​டம்,​ கைரேகை சேக​ரிக்​கப்​பட்டு அடை​யாள அட்டை வழங்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.​

Read more »

குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் கவ​னத்​துக்கு....

​ சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

குடும்ப ஓய்வு ஊதி​யம் பெற்று வரும் ஒய்​வூ​தி​யர்​கள்,​ சிறப்பு மருத்​து​வம் மற்​றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல​வுத் தொகையை -​ குடும்ப ஓய்​வூ​தி​யர் மருத்​துவ நலத்​திட்​டத்​தின் கீழ் அர​சி​ட​மி​ருந்து திரும்​பப் பெற​லாம்.​ ​ இத்​திட்​டத்​தில் சேர அர​சுக்கு மாதம் ரூ.75 வீதம் கரு​வூ​லம் முலம் செலுத்த வேண்​டும். விருப்​பம் உள்​ள​வர்​கள் வரு​கிற 15-11-2009-க்குள் சிதம்​ப​ரம் துணைக் கரு​வூல அலு​வ​ல​கத்​தில் விண்​ணப்​பம் அளிக்க வேண்​டும் என ஓய்​வு​பெற்ற அலு​வ​லர் சங்​கப் பொரு​ளா​ளர் எஸ்.நம்​மாழ்​வார் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​

Read more »

பண்ணைக் குட்டை அமைக்க மானி​யம்

பண் ​ருட்டி,​ நவ. 21:​

தமி​ழக அரசு அளித்த 2 ஏக்​கர் இல​வச நிலத்​தில் பண்ணை குட்​டை​கள் அமைக்க மானி​யம் அளிக்​கப்​ப​டும் என பண்​ருட்டி வேளாண்மை உதவி இயக்​கு​நர் பி.ஹரி​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.​

இது​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்பு:​ ​

கட​லூர் மாவட்​டத்​தில் ஆண்​டுக்கு ஒரு ஹெக்​டே​ரில் ஒரு கோடி லிட்​ட​ருக்​கும் மேலான மழை நீர் பெய்​கி​றது. சுத்​த​மான மழை நீர் மூன்​றில் ஒரு பங்கு கட​லில் கலந்து வீணா​கி​றது.​ ஒவ்​வொரு வய​லி​லும் மழை நீர் வழிந்​தோ​டும் பகு​தி​யில் பண்ணை குட்டை அமைக்க வேண்​டும். 15 மீ நீளம்,​ 6 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 1.35 லட்​சம் லிட்​ட​ரும்,​ 15 மீ நீளம்,​ 3 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 67.5 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீ​ரும் சேமிக்க முடி​யும். மேற்​கண்ட அள​வில் பண்ணை குட்டை அமைக்க,​ அர​சின் 2 ஏக்​கர் இல​வச நிலம் பெற்​றோர் ரூ. 4650-ம்,​ ரூ. 2750-யை மானி​ய​மாக பெற்று அமைக்​க​லாம்.​ வெட்​டிய மண்ணை வயல் வரப்பை உயர்த்​தல்,​ நிலத்தை சமப்​ப​டுத்​தல்,​ குட்​டையை சுற்றி அணை போட பயன்​ப​டுத்​த​லாம். இக் குட்​டை​க​ளால் மண் அரிப்பு தவிர்க்​கப்​பட்டு,​ வளம் கூடும்,​ வெள்​ளச் சேதம் குறைந்து,​ நிலத்​தடி நீர் உய​ரும்,​ சேமிக்​கப்​பட்ட மழை​நீர் கோடைக் காலத்​தில் சொட்டு நீர் பாச​னம்,​ நீர் ஊற்​று​தல் மற​றும் மருந்து தெளிக்க பயன்​ப​டும்.​ எனவே,​ ஒவ்​வொரு விவ​சா​யி​க​ளும் தங்​கள் நிலத்​தில் பண்ணை குட்டை அமைத்து மழை நீரை சேமித்து பயன் அடைய வேண்​டும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior