சிதம்பரம், நவ. 21:
கடற்கரை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக சிதம்பரம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. எனவே அப்பகுதி மக்கள் ஏற்கெனவே கணக்கெடுப்பு முடிவுற்று அதற்காக வழங்கப்பட்ட ஒப்புதல் ரசீதை புகைப்படம் எடுக்கும் மையத்துக்கு எடுத்துச் சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் ஒர் அங்கமாக கடற்கரை கிராமங்களில் முதல் கட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது. அதில் ஒவ்வொரு தனி நபரைப் பற்றிய புள்ளி விபரங்கள், 15 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களிடம் புகைப்படம், கைரேகை சேகரிக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக