உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

பண்ணைக் குட்டை அமைக்க மானி​யம்

பண் ​ருட்டி,​ நவ. 21:​

தமி​ழக அரசு அளித்த 2 ஏக்​கர் இல​வச நிலத்​தில் பண்ணை குட்​டை​கள் அமைக்க மானி​யம் அளிக்​கப்​ப​டும் என பண்​ருட்டி வேளாண்மை உதவி இயக்​கு​நர் பி.ஹரி​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.​

இது​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்பு:​ ​

கட​லூர் மாவட்​டத்​தில் ஆண்​டுக்கு ஒரு ஹெக்​டே​ரில் ஒரு கோடி லிட்​ட​ருக்​கும் மேலான மழை நீர் பெய்​கி​றது. சுத்​த​மான மழை நீர் மூன்​றில் ஒரு பங்கு கட​லில் கலந்து வீணா​கி​றது.​ ஒவ்​வொரு வய​லி​லும் மழை நீர் வழிந்​தோ​டும் பகு​தி​யில் பண்ணை குட்டை அமைக்க வேண்​டும். 15 மீ நீளம்,​ 6 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 1.35 லட்​சம் லிட்​ட​ரும்,​ 15 மீ நீளம்,​ 3 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 67.5 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீ​ரும் சேமிக்க முடி​யும். மேற்​கண்ட அள​வில் பண்ணை குட்டை அமைக்க,​ அர​சின் 2 ஏக்​கர் இல​வச நிலம் பெற்​றோர் ரூ. 4650-ம்,​ ரூ. 2750-யை மானி​ய​மாக பெற்று அமைக்​க​லாம்.​ வெட்​டிய மண்ணை வயல் வரப்பை உயர்த்​தல்,​ நிலத்தை சமப்​ப​டுத்​தல்,​ குட்​டையை சுற்றி அணை போட பயன்​ப​டுத்​த​லாம். இக் குட்​டை​க​ளால் மண் அரிப்பு தவிர்க்​கப்​பட்டு,​ வளம் கூடும்,​ வெள்​ளச் சேதம் குறைந்து,​ நிலத்​தடி நீர் உய​ரும்,​ சேமிக்​கப்​பட்ட மழை​நீர் கோடைக் காலத்​தில் சொட்டு நீர் பாச​னம்,​ நீர் ஊற்​று​தல் மற​றும் மருந்து தெளிக்க பயன்​ப​டும்.​ எனவே,​ ஒவ்​வொரு விவ​சா​யி​க​ளும் தங்​கள் நிலத்​தில் பண்ணை குட்டை அமைத்து மழை நீரை சேமித்து பயன் அடைய வேண்​டும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior