உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

ஆக்​கி​ர​மிப்பு அகற்ற முயற்சி விவ​சாய சங்​கம் மறி​யல்

பண் ​ருட்டி,​ டிச. 1: ​ ​
 
 
     பண்​ருட்டி அருகே நெடுஞ்​சாலை பகு​தி​யில் ஆக்​கி​ர​மிப்பு கட்​டப்​பட்​டி​ருந்த வீடு​களை நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் செவ்​வாய்க்​கி​ழமை அகற்ற முயற்​சித்​த​னர். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து விவ​சாய சங்​கத்​தி​னர் மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.
 
பண் ​ருட்டி வட்​டம்,​ ஏரிப்​பா​ளை​யம் கேட் அருகே நெடுஞ்​சாலை ஓரம் உள்ள பகு​தியை 7 பேர் ஆக்​கி​ர​மிப்பு செய்து வீடு​கள் கட்டி பல ஆண்​டு​க​ளாக வசித்து வரு​கின்​ற​ன​ராம்.
 
இ​தை​ய​டுத்து,​ இந்த ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற வலி​யு​றுத்தி,​ அதன் அருகே உள்ள நிலத்​தின் உரி​மை​யா​ளர் சிவ​னே​சன்,​ நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம் ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற உத்​த​ர​விட்​டது.
 
இ ​தைத் தொடர்ந்து,​ ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் பொக்​லைன் இயந்​தி​ரம் மற்​றும் பணி​யா​ளர்​க​ளு​டன் செவ்​வாய்க்​கி​ழமை முயற்​சித்​த​னர்.
 
இ​தற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்த பாதிக்​கப்​பட்ட மக்​க​ளும்,​ விவ​சாய சங்​கத்​தி​ன​ரும் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.
 
இந்த போராட்​டத்​துக்கு விவ​சாய தொழி​லா​ளர் சங்க வட்​டச் செய​லர் எஸ்.கே. ஏழு​மலை தலைமை வகித்​தார். வட்​டத் தலை​வர் உத்​தி​ரா​பதி,​ புரட்சி பார​தம் மாவட்​டத் தலை​வர் தெய்​வீ​க​தாஸ்,​ ஊராட்​சித் தலைவி ரீனா மணி​வண்​ணன் ஆகி​யோர் ​ சாலை மறிய​லில் பங்​கேற்​ற​னர்.
 
த​க​வ​ல​ றிந்த கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ்,​ வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ டிஎஸ்பி.,சிரா​ஜு​தீன்,​ நெல்​லிக்​குப்​பம் காவல் நிலைய ஆய்​வா​ளர் பாண்​டி​யன் மற்​றும் போலீ​ஸôர் அங்கு விரைந்து சென்று பொது​மக்​களை சம​ரச பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​ட​னர்.​
 
இ​தில் ஆக்​கி​ர​மிப்​பா​ளர்​கள் 8 நாள்​க​ளுக்​குள் வீடு​களை தாங்​க​ளா​கவே காலி செய்​து​கொள்ள வேண்​டும். அவர்​க​ளுக்கு மாற்று இடம் அளிக்க பரிசீ​லிக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டதை அடுத்து போராட்​டத்தை கைவிட்டு விவ​சாய சங்​கத்​தி​னர் கலைந்து சென்​ற​னர்.
 
இப் போராட்​டத்​தால் அப் பகு​தி​யில் ஏற்​பட்ட பதற்​றத்​தை​ய​டுத்து 50-க்கும் மேற்​பட்ட போலீ​ஸôர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​ட​னர்.

Read more »

பாம்புக்கடிக்கு ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் சாவு

கட ​லூர்,​ டிச. 1:​ 


பாம்பு கடித்து ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் இறக்க நேரி​டு​வ​தாக,​ தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்ட கட​லூர் மாவட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டாக்​டர் ஹஃ​பீ​ஸô தெரி​வித்​தார். ​

பாம்பு கடி​யால் பாதிக்​கப்​ப​டும் கிரா​மப்​புற மக்​க​ளுக்கு விரை​வில் சிகிச்சை கிடைப்​பது இல்லை. பல நேரங்​க​ளில் மாவட்​டத் தலைமை மருத்​து​வ​ம​னைக்​குக் கொண்டு வரு​வ​தற்கு ​தா​ம​தம் ஏற்​ப​டு​வ​தால் வழி​யி​லேயே பலர் இறக்க நேரி​டு​கி​றது. ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், தாலுகா அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் பாம்பு கடிக்கு மருந்​து​கள் இருந்​தும் அவற்றை பயன்​ப​டுத்​து​வ​தில் மருத்​து​வர்​க​ளுக்​கும் செவி​லி​யர்​க​ளுக்​கும் போதிய பயிற்சி இல்​லா​மல் உள்​ளது.÷எ​னவே கட​லூர் மாவட்ட மருத்​து​வர்​கள் மற்​றும் செவி​லி​யர்​க​ளுக்கு தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்​டம் சார்​பில் சிறப்​புப் பயிற்சி செவ்​வாய்க்​கி​ழமை அளிக்​கப்​பட்​டது. பயிற்​சிக்கு மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ஜெய​வீ​ர​கு​மார் தலைமை வகித்​தார். ​

நி​கழ்ச்​சி​யில் தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்ட கட​லூர் மாவட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டாக்​டர் ஹஃ​பீ​ஸô கூறி​யது:​ ​ கா​டு​கள் அழிக்​கப்​ப​டு​வ​தால் அங்​குள்ள பாம்​பு​கள் மற்​றும் விஷ ஜந்​துக்​கள் மக்​கள் வாழும் பகு​திக்​குள் வர நேரி​டு​கி​றது. ​ இந்​தி​யா​வில் ஆண்​டு​தோ​றும் 4 லட்​சம் பேர் பாம்​புக் கடிக்கு உள்​ளா​கி​றார்​கள். இவர்​க​ளில் 82 ஆயி​ரம் பேர் விஷப் பாம்​பு​கள் கடிக்கு உள்​ளா​கி​றார்​கள். இதில் ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் இறக்க நேரி​டு​கி​றது.

கி​ரா​மப் புறங்​க​ளில் பாம்பு கடிக்கு உள்​ளா​வோ​ருக்கு விரை​வில் சிகிச்சை அளிக்க தமி​ழ​கம் முழு​தும் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் மற்​றும் தாலுகா மருத்​துவ மனை​க​ளில் பணி​பு​ரி​யும் மருத்​து​வர்​கள் மற்​றும் செவி​லி​யர்​க​ளுக்கு சிறப்​புப் பயிற்சி அளிக்​கப்​ப​டு​கி​றது. என்​றார் டாக்​டர் ஹஃ​பி​ஸô.÷க​ட​லூர் மாவட்​டத்​தில் 40 மருத்​து​வர்​கள் மற்​றும் 40 செவி​லி​யர்​க​ளுக்கு இந்​தப் பயிற்சி அளிக்​கப்​ப​டு​கி​றது. 4-ம் தேதி​வரை இந்​தப் பயிற்சி நடை​பெ​றும். பயிற்​சியை மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ​ ஜெய​வீ​ர​கு​மார் தொடங்கி வைத்​தார்.

Read more »

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ டிச. 1:​ 
 
     வங்​கக் கட​லில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்த கட​லூர் மீன​வர்​கள் மீது,​ இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் தாக்​கு​தல் நடத்​தி​ய​தற்​குக் கண்​ட​னம் தெரி​வித்து,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் திங்​கள்​கி​ழமை மாலை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​
 
 
க​ட​லூர் மீன​வர்​க​ளைத் தாக்​கிய இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். கடற்​கரை மேலாண்​மைச் சட்​டத்தை முழு​மை​யாக கைவிட வேண்​டும். ஆழ்​கட​லில் மீன் பிடிக்​கும் உரி​மை​யைப் பறிக்​கக் கூடாது ஆகிய கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. ​
 
மீன்​பி​டித் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் வைத்தி​லிங்​கம் தலைமை தாங்​கி​னார். சங்க நிர்​வா​கி​கள் சுப்​பு​ரா​யன்,​ சந்​தி​ரன்,​ தங்​க​ராசு,​ தமிழ்​மா​றன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​
 
மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ஒன்​றி​யச் செய​லா​ளர் ஜி.மாத​வன்,​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன்,​ சி.ஐ.டி.யூ. மாவட்​டத் தலை​வர் கருப்​பை​யன்,​ மாவட்​டச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ சிறப்​புத் தலை​வர் பாஸ்​க​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் ஆள​வந்​தார்,​ கண்​ணன்,​ ​ ஊராட்சி ஒன்​றி​யக்​குழு உறுப்​பி​னர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior