கட லூர், டிச. 1:
பாம்பு கடித்து ஆண்டுதோறும் 11 ஆயிரம் பேர் இறக்க நேரிடுவதாக, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஃபீஸô தெரிவித்தார்.
பாம்பு கடியால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கு விரைவில் சிகிச்சை கிடைப்பது இல்லை. பல நேரங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் வழியிலேயே பலர் இறக்க நேரிடுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு மருந்துகள் இருந்தும் அவற்றை பயன்படுத்துவதில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் போதிய பயிற்சி இல்லாமல் உள்ளது.÷எனவே கடலூர் மாவட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சார்பில் சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஃபீஸô கூறியது: காடுகள் அழிக்கப்படுவதால் அங்குள்ள பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் மக்கள் வாழும் பகுதிக்குள் வர நேரிடுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகிறார்கள். இவர்களில் 82 ஆயிரம் பேர் விஷப் பாம்புகள் கடிக்கு உள்ளாகிறார்கள். இதில் ஆண்டுதோறும் 11 ஆயிரம் பேர் இறக்க நேரிடுகிறது.
கிராமப் புறங்களில் பாம்பு கடிக்கு உள்ளாவோருக்கு விரைவில் சிகிச்சை அளிக்க தமிழகம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. என்றார் டாக்டர் ஹஃபிஸô.÷கடலூர் மாவட்டத்தில் 40 மருத்துவர்கள் மற்றும் 40 செவிலியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 4-ம் தேதிவரை இந்தப் பயிற்சி நடைபெறும். பயிற்சியை மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் தொடங்கி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக