கட லூர், டிச. 1:
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த கடலூர் மீனவர்கள் மீது, இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூரில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மீனவர்களைத் தாக்கிய இந்தியக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை மேலாண்மைச் சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சுப்புராயன், சந்திரன், தங்கராசு, தமிழ்மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஜி.மாதவன், நகரச் செயலாளர் சுப்புராயன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கருப்பையன், மாவட்டச் செயலாளர் சுகுமாறன், சிறப்புத் தலைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் ஆளவந்தார், கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக