பண் ருட்டி, டிச. 1:
பண்ருட்டி அருகே நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டிருந்த வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்ற முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
பண் ருட்டி வட்டம், ஏரிப்பாளையம் கேட் அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள பகுதியை 7 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனராம்.
இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வலியுறுத்தி, அதன் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் சிவனேசன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
இ தைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மற்றும் பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை முயற்சித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்களும், விவசாய சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க வட்டச் செயலர் எஸ்.கே. ஏழுமலை தலைமை வகித்தார். வட்டத் தலைவர் உத்திராபதி, புரட்சி பாரதம் மாவட்டத் தலைவர் தெய்வீகதாஸ், ஊராட்சித் தலைவி ரீனா மணிவண்ணன் ஆகியோர் சாலை மறியலில் பங்கேற்றனர்.
தகவல றிந்த கோட்டாட்சியர் செல்வராஜ், வட்டாட்சியர் ஆர்.பாபு, டிஎஸ்பி.,சிராஜுதீன், நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன் மற்றும் போலீஸôர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் ஆக்கிரமிப்பாளர்கள் 8 நாள்களுக்குள் வீடுகளை தாங்களாகவே காலி செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் அளிக்க பரிசீலிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.
இப் போராட்டத்தால் அப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக