உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும்​நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்​கக் கோரிக்கை

கட​லூர்,​  டிச. 5:​ 

                                 அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும் நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று தமிழ்​நாடு பொது சுகா​தா​ரத் துறை அமைச்​சுப் பணி அலு​வ​லர் சங்​கம் அர​சுக்​குக் கோரிக்கை விடுத்​துள்​ளது. ​

                   இச் ​சங்​கத்​தின் மாநில செயற்​கு​ழுக் கூட்​டம் கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​

                      ஆ​ ரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் கோடிக்​க​ணக்​கில் பணப் புழக்​கம் உள்​ள​தால்,​ ​ நிர்​வாக அலு​வ​லர் பணி​யி​டங்​க​ளைத் தோற்​று​விக்க வேண்​டும். அனைத்து வட்​டார சுகா​தார நிலை​யங்​க​ளுக்​கும் அலு​வ​ல​கக் கட்​ட​டம் கட்ட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து இள​நிலை உத​வி​யா​ளர்​க​ளுக்​கும் பதவி உயர்வு வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் பணிச்​சுமை அதி​க​ரித்து உள்​ள​தால்,​ அயல் பணி​களை ரத்து செய்ய வேண்​டும். தாற்​கா​லிக இள​நிலை உத​வி​யா​ளர்​களை பணி​நி​ரந்​த​ரம் செய்ய வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன. ஏற்​கெ​னவே நிறை​வேற்​றப்​பட்ட கோரிக்​கை​க​ளுக்​காக முதல் அமைச்​ச​ருக்கு நன்றி தெரி​விக்​கப்​பட்​டது. புதிய ​ நிர்​வா​கி​கள் பாராட்​டப்​பட்​ட​னர். ​

                         கூட்​டத்​துக்கு மாநி​லத் தலை​வர் எஸ்.பி.தின​மணி தலைமை தாங்​கி​னார். மாநில பொதுச் செய​லா​ளர் ஞான​சே​க​ரன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்​றிய மாநி​லத் தலை​வர் கோ.சூரி​ய​மூர்த்தி சிறப்​புரை நிகழ்த்​தி​னார். சங்க நிர்​வா​கி​கள் சண்​மு​க​ரா​ஜன்,​ கார்​மே​க​வண்​ணன்,​ மோகன்​ராஜ்,​ செல்​வம்,​ கங்​கா​த​ரன்,​ பாஸ்​க​ரன்,​ அரங்க.ரகு த.சேகர் பேசி​னர். முத்​துக்​கிó​ருஷ்​ணன் வர​வேற்​றார். செங்​கேணி நன்றி கூறி​னார்.​

Read more »

திட்டக்குடி அருகே விபத்து: ஆந்திர பக்தர்கள் இருவர் பலி

கட ​லூர்,​ ​ டிச. 5:​ 


                  ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்த இரு பக்​தர்​கள் ராமேஸ்​வ​ரம் கோயி​லில் சாமி கும்​பிட்டு விட்டு திரும்​பு​கை​யில்,​ திட்​டக்​குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்​தில் இறந்​த​னர். சனிக்​கி​ழமை அதி​கா​லை​யில் இந்த விபத்து நடந்​தது.÷ஆந்​திர மாநி​லம் சுகா​கு​ளம் மாவட்​டம் ராணிகா மண்​ட​லத்​தைச் சேர்ந்த 5 பேர் ராமேஸ்​ரம் கோயி​லுக்கு சாமி கும்​பிட காரில் வந்​த​னர். சாமி கும்​பிட்​டு​விட்டு ஆந்​தி​ரம் திரும்​பு​கை​யில்,​ அவர்​கள் பய​ணம் செய்த கார் திட்​டக்​கு​டியை அடுத்த வேப்​பூர் அருகே விபத்​தில் சிக்​கி​யது. திருச்​சி​யில் இருந்து சென்னை நோக்​கிச் சென்ற லாரி அதி​வே​க​மாக வந்து காரின் பின் பகு​தி​யில் மோதி​யது. ​ ​

                       இந்த விபத்​தில் காரில் பய​ணம் செய்த ஈஸ்​வ​ர​ராவ் ​(25), மகேஸ்​வ​ர​ராவ் மனைவி ரானம்​மாள் ​(70) ஆகி​யோர் அதே இடத்​தில் இறந்​த​னர். காய​ம​டைந்த மேலும் மூவர் உளுந்​தூர்​பேட்டை அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.

Read more »

சனி, டிசம்பர் 05, 2009

நாயை கொன்றதற்கு விளக்கம் கேட்டு கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் பன்றிகளை சுடுவதில் சிக்கல்

கடலூர்:

                       நாயை சுட்டு கொன்றதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால்  பன்றிகளை சுடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

                   கடலூர் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய & மாநில அரசு கருத்தடை செய்ய திட்டம் கொண்டுவந்த நிலையில் பச்சாங்குப்பத்தில் ஒரு நாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணைய செயலர் ராஜசேகர் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளார். அதில் கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசு விலங்குகளுக்கான பிராணி கள் வதைப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி எந்த விலங்கையும் துண்புறுத்த கூடாது. இந்நிலையில் ரேபீஸ் போன்ற நோய் பரவாமல் தடுக்க தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில்  மாநில அரசு கடந்த 2007ம் ஆண்டு தெரு நாய்களுக்கு கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம் கொண்டுவந்துள்ளது.


                         ஆனால் கடலூர் நகராட்சிக்குட்பட்ட பச்சாங்குப் பம் பகுதியில் ஒரு தெரு நாய் சுட்டு கொல்லப்பட்டதாக ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது குறித்து நகராட்சி  விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இது போன்று பிராணிகளை சட்டத்தின் அடிப்படை யில் சுட்டு கொல்லக்கூடாது. மாற்று நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும், பன்றிகளை அப்புறப்படுத்த கடந்த 17ம் தேதி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது.  முதுநகர் பகுதியில் பன்றிகளும்  பிடிக்கப்பட் டது.  பன்றிகளை தாங்களே அப்புறப்படுத்துவதற்கு  கால அவகாசம் அளிக்கப்பட்டது. கால அவகாசத்தை தொடர்ந்து பன்றி களை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பொதுசுகாதார நலன் கருதி நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நகராட்சி சார்பில்  7ம் தேதி   முதல் பன்றிகளை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பன்றிகளை  சுட்டு கொல் வது  தவிர வேறு வழியில் லாத நிலையில் தற்பொழுது மத்திய ஆணையத்தின் நோட்டீசால் நகராட்சிக்கு பன்றிகளை சுடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆணையர் குமாரிடம்  கேட்ட போது “ மத்திய ஆணையத்தின் கடிதம் விலங்குகளை சுடுவதற்கோ, கொல்வதற்கோ தடை விதிக்கிறது.


                         இதனால் பன்றிகளை அதனை வளர்ப்பவர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior