கடலூர், டிச. 5:
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆ ரம்ப சுகாதார நிலையங்களில் கோடிக்கணக்கில் பணப் புழக்கம் உள்ளதால், நிர்வாக அலுவலர் பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டும். அனைத்து வட்டார சுகாதார நிலையங்களுக்கும் அலுவலகக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இளநிலை உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிச்சுமை அதிகரித்து உள்ளதால், அயல் பணிகளை ரத்து செய்ய வேண்டும். தாற்காலிக இளநிலை உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளுக்காக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர்.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எஸ்.பி.தினமணி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார். சங்க நிர்வாகிகள் சண்முகராஜன், கார்மேகவண்ணன், மோகன்ராஜ், செல்வம், கங்காதரன், பாஸ்கரன், அரங்க.ரகு த.சேகர் பேசினர். முத்துக்கிóருஷ்ணன் வரவேற்றார். செங்கேணி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக