உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

நாயை கொன்றதற்கு விளக்கம் கேட்டு கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் பன்றிகளை சுடுவதில் சிக்கல்

கடலூர்:

                       நாயை சுட்டு கொன்றதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால்  பன்றிகளை சுடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

                   கடலூர் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய & மாநில அரசு கருத்தடை செய்ய திட்டம் கொண்டுவந்த நிலையில் பச்சாங்குப்பத்தில் ஒரு நாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணைய செயலர் ராஜசேகர் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளார். அதில் கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசு விலங்குகளுக்கான பிராணி கள் வதைப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி எந்த விலங்கையும் துண்புறுத்த கூடாது. இந்நிலையில் ரேபீஸ் போன்ற நோய் பரவாமல் தடுக்க தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில்  மாநில அரசு கடந்த 2007ம் ஆண்டு தெரு நாய்களுக்கு கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம் கொண்டுவந்துள்ளது.


                         ஆனால் கடலூர் நகராட்சிக்குட்பட்ட பச்சாங்குப் பம் பகுதியில் ஒரு தெரு நாய் சுட்டு கொல்லப்பட்டதாக ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது குறித்து நகராட்சி  விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இது போன்று பிராணிகளை சட்டத்தின் அடிப்படை யில் சுட்டு கொல்லக்கூடாது. மாற்று நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும், பன்றிகளை அப்புறப்படுத்த கடந்த 17ம் தேதி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது.  முதுநகர் பகுதியில் பன்றிகளும்  பிடிக்கப்பட் டது.  பன்றிகளை தாங்களே அப்புறப்படுத்துவதற்கு  கால அவகாசம் அளிக்கப்பட்டது. கால அவகாசத்தை தொடர்ந்து பன்றி களை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பொதுசுகாதார நலன் கருதி நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நகராட்சி சார்பில்  7ம் தேதி   முதல் பன்றிகளை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பன்றிகளை  சுட்டு கொல் வது  தவிர வேறு வழியில் லாத நிலையில் தற்பொழுது மத்திய ஆணையத்தின் நோட்டீசால் நகராட்சிக்கு பன்றிகளை சுடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆணையர் குமாரிடம்  கேட்ட போது “ மத்திய ஆணையத்தின் கடிதம் விலங்குகளை சுடுவதற்கோ, கொல்வதற்கோ தடை விதிக்கிறது.


                         இதனால் பன்றிகளை அதனை வளர்ப்பவர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior