உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ​ ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.12: ​ 
 
                   மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கட​லூர் வண்​டிப்​பா​ளை​யம் கிளை சார்​பில் வண்​டிப்​பா​ளை​யம் கடைத் தெரு​வில் சனிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ ​
 
                  ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​கள் முடி​வுற்ற பகு​தி​க​ளில் சாலை​கள் அமைக்க வேண்​டும்,​ கைத்​தறி நெச​வுத் தொழி​லா​ளர்​க​ளுக்கு 33 சத​வீ​தம் கூலி உயர்வு வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல கோரிக்​கை​க​ளுக்​காக இப்  போராட்​டம் நடந்​தது.​ ​ கிளைச் செய​லா​ளர் பி.முரு​கே​சன் தலைமை தாங்​கி​னார்.​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வாலண்​டீனா,​​ ஒன்​றி​யச் செய​லா​ளர் மாத​வன்,​​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

விளக்கு பூஜை

நெய்வேலி,​​ டிச.12: 

              மந்​தா​ரக்​குப்​பம் அகில பாரத ஐயப்ப சேவா சங்​கம் சார்​பில் 7-ம் ஆண்டு ஐயப்​பன் திரு​வி​ளக்கு பூஜை வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்த பூஜையை முன்​னிட்டு 600-க்கும் மேற்​பட்ட பெண்​கள் விளக்கு பூஜை​யில் கலந்து கொண்டு வழி​பட்​ட​னர்.​  தொடர்ந்து நடை​பெற்ற பூஜை​யில் ஐயப்ப மலைக்கு மாலை அணிந்​தி​ருந்த பக்​தர்​கள் பெருந்​தி​ர​ளா​கக் கலந்து கொண்டு பக்​திப் பாடல்​களை பாடி​னர்.​ வி ​ளக்கு பூஜைக்​கான ஏற்​பா​டு​களை சேவா சங்க நிர்​வா​கி​கள் எம்.கே.நாக​ராஜ்,​​ கோ.சத்​தி​ய​மூர்த்தி மற்​றும் வி.கைலா​சம் ஆகி​யோர் செய்​தி​ருந்​த​னர்.

Read more »

புத்​தக அறி​முக விழா

கட​லூர்,​​ டிச.12: ​

            கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் புத்​தக அறி​முக விழா சனிக்​கி​ழமை மாலை நடை​பெற்​றது.​ ​ நிகழ்ச்​சிக்கு,​​ வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தலைமை தாங்​கி​னார்.​ என்.திரு​ஞா​னம் வர​வேற்​றார்.​ பாவண்​ணன் எழு​திய ஓம்​நமோ என்ற நூலை எல்.ஐ.சி.​ ஊழி​யர் சங்க மக​ளிர் அணித் தலைவி ஜெயஸ்ரீ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.​ இரா.நட​ரா​ஜன் எழு​திய உல​கத் தொழில் நுட்ப முன்​னோ​டி​கள் என்ற நூலை பி.எஸ்.என்.எல்.​ ஓய்வு பெற்ற அலு​வ​லர் கே.ரவீந்​தி​ரன் அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior