உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்பு கொடி போராட்டம் வாபஸ்

கடலூர் :

                 பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக் காததைக் கண்டித்து பொது நல இயக்கங்கள் சார்பில் கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்புக் கொடி போராட்டம், அதிகாரிகளின் சமாதான முயற்சியால் வாபஸ் பெறப்பட்டது.

                     கடலூரில் ஆமை வேகத் தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாகியுள்ளது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

                         பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கக் கோரி நகரில் உள்ள 45 பொது நல இயக் கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் அதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தாதைக் கண்டித்து குடியரசு தினமான நாளை (26ம் தேதி) கடலூரில் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

                    அதனைத் தொடர்ந்து நேற்று போராட்டக்குழுக் களுடன் சமாதான பேச்சுவார்த்தை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர். டி.ஓ., செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட் டத்தில் சேர்மன் தங்கராசு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், நெடுஞ்சாலை, நகராட்சி பொறியாளர்கள், டி.எஸ்.பி., ஸ்டாலின், தாசில்தார் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும், போராட்டக்குழு ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இந்திய கம்யூ., சம்பந்தம், குளோப், வெண்புறா குமார், திருமாறன், தனியார் பஸ் தொழிலாளர் சங்க குருராமலிங்கம், பண்டரிநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

                       கூட்டத்தில் நெடுஞ் சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வண்டிப்பாளையம் ரோடு, போடி செட்டி தெரு, சஞ்சீவி ராயன் கோவில் தெரு ரோடு, தேரடித் தெரு  சாலைகளை வரும் மார்ச் 15ம் தேதிக்குள்ளும், நெல் லிக்குப்பம் சாலை,  பஸ் நிலையம் இணைப்பு சாலை புதுப் பிக்கும் பணி நாளை (இன்று) துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று பொதுநல அமைப்புகள் கறுப்புக் கொடி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அதிகாரிகளுக்குள் மோதல்!

                     சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் சாலைகள் மிக மோசமாக இருப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், 9 ரோடுகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு 2 கோடி பணம் வழங் கப்பட்டுள்ளது என்றார். அதற்கு நெடுஞ்சாலை துறை பொறியாளர் தற்போதுதான் சாலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

                          உடன் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரகுநாதன், பொய்யான தகவலை கூறாதீர்கள். நீங்கள் யார், ஏன் உங்கள் உயர் அதிகாரி வராமல் நீங்கள் வந்துள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ரகுநாதன் மூன்று மாதத்திற்கு முன் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சாலைகளை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்ததற்கான ஆதாரத்தை எடுத்து காட்டினார். கூட்டத்தில் நகராட்சி, நெடுஞ்சாலை துறை, குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசினர்.

Read more »

மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதில் சிக்கல்! அதிகாரிகளின் அலட்சியத்தால் குழப்பம் நீடிப்பு

நெல்லிக்குப்பம் :

                         தமிழக அரசின் காப் பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

                    தமிழக அரசு உயிர்காக் கும் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம்  செயல்படுத்தப்படும்  இத் திட்டத்திற்கு தமிழக அரசு 816 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தொழிலாளர், விவசாயிகள் நல வாரியங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் மற் றும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய முடியும்.

                    இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு குடும் பத்துக்கு நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிலான சிகிச் சையை அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம். இருதய நோய், புற்றுநோய், மூட்டு சம்பந் தப் பட்டது உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். இதற்கான அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி கடலூர் மாவட்டத்தில் முடிந்துள்ளது. வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் அந்த அடையாள அட்டையை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

                        மற்றவர்கள் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற் குள் உள்ளது என வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்ததால் அனைவருக்கும் வி.ஏ.ஓ., சான்று வழங்க முடியாது என்பதால், ரேஷன் கார்டை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.  புகைப்படம் எடுக்க வந்தவர்களின் வருமானத்தை பற்றி கவலைப்படவில்லை.

                            இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானோர்  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆண் டக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட இலவசமாக சிகிச்சை பெறலாம் என்ற ஆசையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காப்பீட்டு திட்டத்தை நடத்தும் தனியார் நிறுவனம் அரசு கூறியது போல் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே அடை யாள அட்டை வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.

                       இந்நிலையில் புகைப்படம் எடுத்த அனைவருக் கும் அடையாள அட்டை வருவாய் துறையிடம் வந் துள்ளது. காப்பீட்டு நிறுவனம் கண்டிப்பாக உள்ளதால், அதிக வருமானம் உள்ளவர்களின் அடையாள அட்டையை வழங் கக் கூடாது என கலெக்டர் கூறியுள்ளார். அனைவரும் அடையாள அட்டை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

                     வருமானத்தை காரணம் கூறி அடையாள அட்டை வழங்காவிட் டால் பிரச்னை வரும் என்பதால் யாருக்கும் வழங்காமல் உள்ளனர். புகைப்படம் எடுக்கும் பொழுதே சரியான விதிமுறைகளை பின்பற்றியிருந் தால் இதுபோன்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம். அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுதியான நபர்களுக்கு கூட அடையாள அட்டை கிடைக்காமல் உள்ளது.

Read more »

சனி, ஜனவரி 23, 2010

மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி:     

                    தொடங்கப்பட்ட நாள் முதல் இயங்காமல் மூடியுள்ள கீழிருப்பு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்யவுள்ளதாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

                              பண்ருட்டி வட்டம் கீழிருப்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் கீழிருப்பில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் மூடியே உள்ளதால், கிராம மக்கள் சிகிச்சைக்காக பண்ருட்டிக்கு செல்கின்றனர். பிரசவம் பார்பதற்காகவும், அவசரக் கால சிகிச்சைக்காகவும் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மூடியுள்ளதால், பிரசவம் மற்றும் அவசர உதவி பெற முடியாத நிலை உள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதிக்காக கட்டப்பட்ட தொட்டி குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்துக்கு மருத்துவரையும், மருத்துவ உதவியாளரையும் பணியமர்த்தி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இல்லை என்றால் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து, கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கீழிருப்பு கிராம சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. பல ஆண்டுகளாக சாலைகள் போடாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைகள் அமைத்து தரவேண்டும் எனவும் வெ.பழனிமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior