உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்பு கொடி போராட்டம் வாபஸ்

கடலூர் :

                 பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக் காததைக் கண்டித்து பொது நல இயக்கங்கள் சார்பில் கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்புக் கொடி போராட்டம், அதிகாரிகளின் சமாதான முயற்சியால் வாபஸ் பெறப்பட்டது.

                     கடலூரில் ஆமை வேகத் தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாகியுள்ளது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

                         பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கக் கோரி நகரில் உள்ள 45 பொது நல இயக் கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் அதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தாதைக் கண்டித்து குடியரசு தினமான நாளை (26ம் தேதி) கடலூரில் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

                    அதனைத் தொடர்ந்து நேற்று போராட்டக்குழுக் களுடன் சமாதான பேச்சுவார்த்தை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர். டி.ஓ., செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட் டத்தில் சேர்மன் தங்கராசு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், நெடுஞ்சாலை, நகராட்சி பொறியாளர்கள், டி.எஸ்.பி., ஸ்டாலின், தாசில்தார் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும், போராட்டக்குழு ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இந்திய கம்யூ., சம்பந்தம், குளோப், வெண்புறா குமார், திருமாறன், தனியார் பஸ் தொழிலாளர் சங்க குருராமலிங்கம், பண்டரிநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

                       கூட்டத்தில் நெடுஞ் சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வண்டிப்பாளையம் ரோடு, போடி செட்டி தெரு, சஞ்சீவி ராயன் கோவில் தெரு ரோடு, தேரடித் தெரு  சாலைகளை வரும் மார்ச் 15ம் தேதிக்குள்ளும், நெல் லிக்குப்பம் சாலை,  பஸ் நிலையம் இணைப்பு சாலை புதுப் பிக்கும் பணி நாளை (இன்று) துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று பொதுநல அமைப்புகள் கறுப்புக் கொடி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அதிகாரிகளுக்குள் மோதல்!

                     சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் சாலைகள் மிக மோசமாக இருப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், 9 ரோடுகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு 2 கோடி பணம் வழங் கப்பட்டுள்ளது என்றார். அதற்கு நெடுஞ்சாலை துறை பொறியாளர் தற்போதுதான் சாலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

                          உடன் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரகுநாதன், பொய்யான தகவலை கூறாதீர்கள். நீங்கள் யார், ஏன் உங்கள் உயர் அதிகாரி வராமல் நீங்கள் வந்துள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ரகுநாதன் மூன்று மாதத்திற்கு முன் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சாலைகளை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்ததற்கான ஆதாரத்தை எடுத்து காட்டினார். கூட்டத்தில் நகராட்சி, நெடுஞ்சாலை துறை, குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior