நெல்லிக்குப்பம் :
தமிழக அரசின் காப் பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு உயிர்காக் கும் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இத் திட்டத்திற்கு தமிழக அரசு 816 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தொழிலாளர், விவசாயிகள் நல வாரியங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் மற் றும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய முடியும்.
இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு குடும் பத்துக்கு நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிலான சிகிச் சையை அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம். இருதய நோய், புற்றுநோய், மூட்டு சம்பந் தப் பட்டது உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். இதற்கான அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி கடலூர் மாவட்டத்தில் முடிந்துள்ளது. வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் அந்த அடையாள அட்டையை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மற்றவர்கள் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற் குள் உள்ளது என வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்ததால் அனைவருக்கும் வி.ஏ.ஓ., சான்று வழங்க முடியாது என்பதால், ரேஷன் கார்டை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர். புகைப்படம் எடுக்க வந்தவர்களின் வருமானத்தை பற்றி கவலைப்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆண் டக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட இலவசமாக சிகிச்சை பெறலாம் என்ற ஆசையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காப்பீட்டு திட்டத்தை நடத்தும் தனியார் நிறுவனம் அரசு கூறியது போல் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே அடை யாள அட்டை வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.
இந்நிலையில் புகைப்படம் எடுத்த அனைவருக் கும் அடையாள அட்டை வருவாய் துறையிடம் வந் துள்ளது. காப்பீட்டு நிறுவனம் கண்டிப்பாக உள்ளதால், அதிக வருமானம் உள்ளவர்களின் அடையாள அட்டையை வழங் கக் கூடாது என கலெக்டர் கூறியுள்ளார். அனைவரும் அடையாள அட்டை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வருமானத்தை காரணம் கூறி அடையாள அட்டை வழங்காவிட் டால் பிரச்னை வரும் என்பதால் யாருக்கும் வழங்காமல் உள்ளனர். புகைப்படம் எடுக்கும் பொழுதே சரியான விதிமுறைகளை பின்பற்றியிருந் தால் இதுபோன்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம். அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுதியான நபர்களுக்கு கூட அடையாள அட்டை கிடைக்காமல் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக