உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

புதுச்சேரி வங்கி அதிகாரி உடல் கடலூரில் கரை ஒதுங்கியது

கடலூர்: 

                        புதுச்சேரியில் காணாமல் போன வங்கி அதிகாரியின் உடல் கடலூர் கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26). ஏலம்பம் பாரதி கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி அலுவலத்திலிருந்து டெபாசிட்தாரர்களை கேன்வாஸ் செய்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
 
                             வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவரது தம்பி அரவிந்தராஜ் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஆனந்தராஜை தேடிவந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை கடலூர் சோனங்குப்பம் கடற்கரையில் ரத்த காயங்களுடன் ஆனந்தராஜ் உடல் கரை ஒதுங்கியது. கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என்பது குறித்து துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஊராட்சி தலைவரின் கணவர் கூட்டம் நடத்த முயற்சி : துணைத் தலைவர் உட்பட 7 பேர் வெளிநடப்பு

பரங்கிப்பேட்டை: 

                          சிதம்பரம் அருகே ஊராட்சித் தலை வரின் கணவர், கூட்டம் நடத்த முயன்றதைக் கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் ரபிக்குல் தர்ஜா. இவர், தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஊராட்சி கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவரது கணவர் அப்துல் ரஹீமே பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாதாந்திர கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. துணைத் தலைவர் உட்பட ஒன்பது வார்டு உறுப்பினர்களும் காத்திருந்தனர். பகல் 12 மணிக்கு ஊராட்சித் தலைவரின் கணவர் அப்துல் ரஹீம், கூட்டத்தை நடத்த முயன்றார். அப்போது துணைத் தலைவர் முத்து ஞானசேகரன் உட்பட ஏழு வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சி கூட்டங்கள், பொது விழாக்களில் தலைவர் பங்கேற்பதில்லை. நான்கு ஆண்டுகளில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அனைத்து வார்டு உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காண்பிக்க வேண்டும். தினமும் ஊராட்சி அலுவலகத்தை திறக்க வேண்டும். ஆறு மாதமாக ஊராட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை எனக் கேட்டு பிரச்னை செய்தனர். அதனால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து  அனைவரும், தலைவர் வந்தால் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தனர். ஒரு பெண் உறுப்பினர் உட்பட இருவர் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

Read more »

புதன், பிப்ரவரி 03, 2010

ரேஷன் கார்டு கிடைக்காமல் மக்கள் அவதி! மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

சேத்தியாத்தோப்பு : 

                       விண்ணப்பித்து 6 ஆண்டாகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேத்தியாத்தோப்பு குறுவட்டத்திற்கு சேத்தியாத்தோப்பு, பெரியக்குப்பம், சின்னக்குப்பம், ப.ஆதனூர், அகரஆலம்பாடி, கத்தாழை, கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம், வளையமாதேவி, எறும் பூர், ஆனைவாரி, வீரமுடையாநத்தம், பெரியநற்குணம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2008ம் ஆண்டு சேத்தியாத்தோப்பில் அப் போதைய வருவாய் ஆய்வாளரிடம் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தனர்.

                விண்ணப்பம் பெறவே வள்ளலார் ஆலய நன்கொடையையும் மனுதாரர்கள் கொடுத்தனர். இது தொடர்பாகவும், வேறு சில பிரச்னை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப் பட்டு புதிய வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அதன் முந்தைய வருவாய் ஆய்வாளரில் பரிசீலிக்கப்படாத மனுக்களையும், புதிய மனுக்களையும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பொதுமக்கள் கொடுத்தனர். அதன்படி இதுவரை சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்டத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வேண்டிய விண் ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பரிந்துரைத்து அனுப்பியும் கூட இதுவரை எவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. உணவு அமைச்சர் வேலு பங் கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரேஷன் கார்டு வேண்டி விண் ணப்பித்த மூன்று மாதத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏனோ சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்ட மக்களுக்கு பொருந்தாமல் போகிறது. விண்ணப்பித்து இரு ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு கிடைக் காத சேத்தியாத்தோப்பு குறுவட்டத்தை சேர்ந்த மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் அட்டை பெறமுடியவில்லை.
                        தற்போது உள்ள ரேஷன் கார்டின் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் போது தங்களுக்கும் ரேஷன் கார்டு புதியதாக கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால் தமிழக அரசு ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க கால அவகாசம் வேண் டும் என்ற காரணத்தை காட்டி பழைய ரேஷன் கார்டுகளுக்கான உரிமத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு தங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மனுக்களை பரிசீலித்து உடனடியாக ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior