உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

ரேஷன் கார்டு கிடைக்காமல் மக்கள் அவதி! மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

சேத்தியாத்தோப்பு : 

                       விண்ணப்பித்து 6 ஆண்டாகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேத்தியாத்தோப்பு குறுவட்டத்திற்கு சேத்தியாத்தோப்பு, பெரியக்குப்பம், சின்னக்குப்பம், ப.ஆதனூர், அகரஆலம்பாடி, கத்தாழை, கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம், வளையமாதேவி, எறும் பூர், ஆனைவாரி, வீரமுடையாநத்தம், பெரியநற்குணம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2008ம் ஆண்டு சேத்தியாத்தோப்பில் அப் போதைய வருவாய் ஆய்வாளரிடம் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தனர்.

                விண்ணப்பம் பெறவே வள்ளலார் ஆலய நன்கொடையையும் மனுதாரர்கள் கொடுத்தனர். இது தொடர்பாகவும், வேறு சில பிரச்னை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப் பட்டு புதிய வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அதன் முந்தைய வருவாய் ஆய்வாளரில் பரிசீலிக்கப்படாத மனுக்களையும், புதிய மனுக்களையும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பொதுமக்கள் கொடுத்தனர். அதன்படி இதுவரை சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்டத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வேண்டிய விண் ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பரிந்துரைத்து அனுப்பியும் கூட இதுவரை எவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. உணவு அமைச்சர் வேலு பங் கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரேஷன் கார்டு வேண்டி விண் ணப்பித்த மூன்று மாதத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏனோ சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்ட மக்களுக்கு பொருந்தாமல் போகிறது. விண்ணப்பித்து இரு ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு கிடைக் காத சேத்தியாத்தோப்பு குறுவட்டத்தை சேர்ந்த மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் அட்டை பெறமுடியவில்லை.
                        தற்போது உள்ள ரேஷன் கார்டின் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் போது தங்களுக்கும் ரேஷன் கார்டு புதியதாக கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால் தமிழக அரசு ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க கால அவகாசம் வேண் டும் என்ற காரணத்தை காட்டி பழைய ரேஷன் கார்டுகளுக்கான உரிமத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு தங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மனுக்களை பரிசீலித்து உடனடியாக ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior