உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

ஊராட்சி தலைவரின் கணவர் கூட்டம் நடத்த முயற்சி : துணைத் தலைவர் உட்பட 7 பேர் வெளிநடப்பு

பரங்கிப்பேட்டை: 

                          சிதம்பரம் அருகே ஊராட்சித் தலை வரின் கணவர், கூட்டம் நடத்த முயன்றதைக் கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் ரபிக்குல் தர்ஜா. இவர், தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஊராட்சி கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவரது கணவர் அப்துல் ரஹீமே பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாதாந்திர கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. துணைத் தலைவர் உட்பட ஒன்பது வார்டு உறுப்பினர்களும் காத்திருந்தனர். பகல் 12 மணிக்கு ஊராட்சித் தலைவரின் கணவர் அப்துல் ரஹீம், கூட்டத்தை நடத்த முயன்றார். அப்போது துணைத் தலைவர் முத்து ஞானசேகரன் உட்பட ஏழு வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சி கூட்டங்கள், பொது விழாக்களில் தலைவர் பங்கேற்பதில்லை. நான்கு ஆண்டுகளில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அனைத்து வார்டு உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காண்பிக்க வேண்டும். தினமும் ஊராட்சி அலுவலகத்தை திறக்க வேண்டும். ஆறு மாதமாக ஊராட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை எனக் கேட்டு பிரச்னை செய்தனர். அதனால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து  அனைவரும், தலைவர் வந்தால் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தனர். ஒரு பெண் உறுப்பினர் உட்பட இருவர் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior