உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

தீக்குளித்த பெண் பலி

பண்ருட்டி : 

                  வயிற்று வலி தாங்க முடியாமல் தீக்குளித்த பெண் இறந்தார். பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(25). திருமணமாகி 8 ஆண்டாகிறது. கடந்த 8ம் தேதி செல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. விரக்தியடைந்த செல்வி  தீக்குளித்தார். உடல் கருகிய செல்வியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                     தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி தமிழ்நாடு தலித் இன துணை திட்ட போராட்டகுழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும் பட்ஜெட்டில் தலித் இனத்தவருக்கு துணைத் திட்ட நிதியாக 20 சதவீதம் தொகையை முழுமையாக ஒதுக்கி இதனை பொது திட்டத்திற்கு மாற் றாமல் தலித் மக்களின் மேம்பாட்டிற்காக மட் டுமே பயன்படுத்த வேண் டும். நிதியை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைத்திட வேண்டும். தலித் இன துணைத் திட் டத்தை முறையாக நடைமுறை படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தலித் இன துணைத் திட்ட போராட் டக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் ஜெயசீலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் சாமித் துரை முன்னிலை வகித்தார். அம்பேத்கர் பேரவை மாவட்டத் தலைவர் கமராஜ் வரவேற்றார். தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு தலைவர் நிக்கோலஸ், பீம்சேனா, இந்திய குடியரசு கட்சி ஆனந்தவேல், செயலாளர் காமராஜ்,  ஜான்பிரிட்டோ, கணேசன்  பங்கேற்றனர்.

Read more »

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சாலை மறியல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பதிவு செய்ய அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 2007-09ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப் பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஒரு அரசு பயிற்சி மையம், 2 உதவி பெறும் மையம் மற்றும் 31 தனியார் மையங்களைச் சேர்ந்த 2,700 பேர் தேர்வு எழுதினர். இதில் 75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று மாதங்களுக்கு பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. "சீனியாரிட்டியை' தக்க வைத்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.

               ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை முறைப்படுத்தினர்.  இரவு முதல் நின்றிருந்ததால் நேற்று காலை 11.30 மணி அளவில் இரு பெண்கள் மயங்கி விழுந் தனர்.  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே பதிவு செய்யும் பணி மந்தமாக நடைபெறுவதாகவும், தங்களை உள்ளே அனுமதிக்க மறுப்பதாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியல் கை விடப்பட்டது. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior