உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சாலை மறியல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பதிவு செய்ய அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 2007-09ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப் பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஒரு அரசு பயிற்சி மையம், 2 உதவி பெறும் மையம் மற்றும் 31 தனியார் மையங்களைச் சேர்ந்த 2,700 பேர் தேர்வு எழுதினர். இதில் 75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று மாதங்களுக்கு பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. "சீனியாரிட்டியை' தக்க வைத்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.

               ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை முறைப்படுத்தினர்.  இரவு முதல் நின்றிருந்ததால் நேற்று காலை 11.30 மணி அளவில் இரு பெண்கள் மயங்கி விழுந் தனர்.  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே பதிவு செய்யும் பணி மந்தமாக நடைபெறுவதாகவும், தங்களை உள்ளே அனுமதிக்க மறுப்பதாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியல் கை விடப்பட்டது. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior