உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

பாம்புகளுடன் விவசாயி வந்ததால் சர்க்கரை ஆலையில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: 

                   கரும்பை எரித்து வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வயலில் இருந்த பாம்புகளை பிடித்து வந்து ஆலை வளாகத்தில் போட்டதால், பரபரப்பு ஏற் பட்டது.

                கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பில் கொடிகள் ஏறியிருந்தால் வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் கரும்பு தோட்டத்தை தீ வைத்து கொளுத்திவிட்டு வெட்டுவது வழக்கம். தீயில் எரிந்த கரும்புகளை சப்ளை செய்வதால் ஆலைக்கு சிறிதளவு இழப்பு ஏற்படும். இதனால், எரித்த கரும்புகளை எடுத்து வரக்கூடாது என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                   இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப் பட்டிருந்த கரும்பை வெட்ட ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்பேரில், கீழ்கவரப்பட்டு அரிகடல் என்பவர் கரும்பு வெட்டும் பணியை துவங்கினார். கரும்பு வயலில் பாம்புகள் அதிகமாக இருந்தது. அதனால் கரும்பு வயலை எரித்து விட்டு வெட்ட அரிகடல் அனுமதி கேட்டார். ஆலை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த அரிகடல், நிலத்தில் இருந்த இரண்டு சாரைப் பாம்பு, 10க்கும் மேற்பட்ட பச்சை பாம்புகளை அடித்து சாக்கு பையில் போட்டு நேற்று சர்க்கரை ஆலைக்கு எடுத்து வந்தார். அந்த பாம்புகளை பிரித்து வைத்து, "இதற்காக தான் தீ வைக்க அனுமதி கேட்டேன்' என்று கூறினார். பாம்புகளை பார்க்க கூட்டம் கூடியது. பாம்புகளை எடுத்து வந்த அரிகடலை, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தால், ஆலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

கடலூர் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்


கடலூர்: 

              கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட 25 அறை கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முறைகேடுகள் நடப் பதாக பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த 8ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வின் போது பறக்கும் படையைச் சேர்ந்த 30 பேர் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து 10ம் தேதி இரவோடு இரவாக அப் பள்ளியில் பணியில் ஈடுபட்ட 25 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள ஐந்து மையங்களின் தலைமை கண் காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

                   இந்நிலையில் 11ம் தேதி நடந்த வேதியியல் தேர்வின் போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் கருணாகரன் கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அறை கண் காணிப்பாளர்களாக நியமித்திருப்பதை அறிந்து, அனைவரையும் வேறு மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று அம்மையத்தின் முதன்மை கண் காணிப்பாளர், துறை அலுவலர், மூன்று கூடுதல் துறை அலுவலர் கள் மற்றும் 25 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு தேர்வின் போதும் கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

பேக்கரியில் தீ விபத்து

கடலூர்: 

             கடலூர் முதுநகரில் நேற்று இரவு பேக்கரி எரிந்து சேதமடைந்தது. கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் மதிவாணன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் மின் விளக்கு திடீரென வெடித்ததால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக கூரை தீ பிடித்து எரிந்தது. கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior