உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

பாம்புகளுடன் விவசாயி வந்ததால் சர்க்கரை ஆலையில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: 

                   கரும்பை எரித்து வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வயலில் இருந்த பாம்புகளை பிடித்து வந்து ஆலை வளாகத்தில் போட்டதால், பரபரப்பு ஏற் பட்டது.

                கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பில் கொடிகள் ஏறியிருந்தால் வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் கரும்பு தோட்டத்தை தீ வைத்து கொளுத்திவிட்டு வெட்டுவது வழக்கம். தீயில் எரிந்த கரும்புகளை சப்ளை செய்வதால் ஆலைக்கு சிறிதளவு இழப்பு ஏற்படும். இதனால், எரித்த கரும்புகளை எடுத்து வரக்கூடாது என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                   இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப் பட்டிருந்த கரும்பை வெட்ட ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்பேரில், கீழ்கவரப்பட்டு அரிகடல் என்பவர் கரும்பு வெட்டும் பணியை துவங்கினார். கரும்பு வயலில் பாம்புகள் அதிகமாக இருந்தது. அதனால் கரும்பு வயலை எரித்து விட்டு வெட்ட அரிகடல் அனுமதி கேட்டார். ஆலை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த அரிகடல், நிலத்தில் இருந்த இரண்டு சாரைப் பாம்பு, 10க்கும் மேற்பட்ட பச்சை பாம்புகளை அடித்து சாக்கு பையில் போட்டு நேற்று சர்க்கரை ஆலைக்கு எடுத்து வந்தார். அந்த பாம்புகளை பிரித்து வைத்து, "இதற்காக தான் தீ வைக்க அனுமதி கேட்டேன்' என்று கூறினார். பாம்புகளை பார்க்க கூட்டம் கூடியது. பாம்புகளை எடுத்து வந்த அரிகடலை, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தால், ஆலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior