உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

கடலூர் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்


கடலூர்: 

              கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட 25 அறை கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முறைகேடுகள் நடப் பதாக பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த 8ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வின் போது பறக்கும் படையைச் சேர்ந்த 30 பேர் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து 10ம் தேதி இரவோடு இரவாக அப் பள்ளியில் பணியில் ஈடுபட்ட 25 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள ஐந்து மையங்களின் தலைமை கண் காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

                   இந்நிலையில் 11ம் தேதி நடந்த வேதியியல் தேர்வின் போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் கருணாகரன் கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அறை கண் காணிப்பாளர்களாக நியமித்திருப்பதை அறிந்து, அனைவரையும் வேறு மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று அம்மையத்தின் முதன்மை கண் காணிப்பாளர், துறை அலுவலர், மூன்று கூடுதல் துறை அலுவலர் கள் மற்றும் 25 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு தேர்வின் போதும் கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior