உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

சுனாமி வீடு கட்ட போலி ஆவணங்கள் தாக்கல்: மோசடி கான்ட்ராக்டர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

                     சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜிவ் காந்தி மறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுப்பவர்கள் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாயும், கூடுதல் வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுருத்தப்பட்டது. இந்த டெண்டரை எடுத்து, கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற் பேட்டையில் 'ஐ டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' நடத்தி வரும் கோண்டூர் ஜோதி நகர் சந்தானம் மகன் ராஜன் (29) என்பவர் 125 வீடுகள் கட்டி வருகிறார்.

                     இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டெண்டரில் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ராஜன் கொடுத்த வைப்பு தொகைக்கான ஆவணங்கள் போலியானவை என்பதும், போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி திட்ட ஒலுவலர் சீனுவாசன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றிய ராஜனை நேற்று மாலை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

நகைக்காக மூதாட்டிகள் இருவர் கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கடலூர் : 

                    மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது.

                    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் சாத்தப்பன் மனைவி அம்மணியம்மாள்(65). கடந்த 2008ம் ஆண்டு பிப். 4ம் தேதி அதே ஊரில் உள்ள கோரித்தோப்பு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அம்மணியம்மாளை மர்ம நபர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 55 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றார். அதேபோல் கடந்த 2008ம் ஆண்டு டிச. 29ம் தேதி திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி மங்களம் (70) மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.

                        ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் தனித் தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி அடுத்த தொளார் வடக்கு காலனியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்ச்செல்வன்(33) இரண்டு மூதாட்டிகளையும் நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அசோகன், இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த செந்தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். ஆயுள் தண் டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

Read more »

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்லூர் ஒன்றிய சேர்மன் ஆறுதல்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலத்தில் கடந்த 27ம் தேதி சிறுபாக்கத்தில் இருந்து வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். காயமடைந்த 31 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் விருத்தாசாலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா நேற்று சந் தித்து ஆறுதல் கூறி பிரட், பிஸ்கட் வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, துணை தலைவர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவினாயகம், வெங்கடாசலம், சீனுவாசன், மோகன்ராஜ், ஜெய்சங்கர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior