உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

நகைக்காக மூதாட்டிகள் இருவர் கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கடலூர் : 

                    மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது.

                    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் சாத்தப்பன் மனைவி அம்மணியம்மாள்(65). கடந்த 2008ம் ஆண்டு பிப். 4ம் தேதி அதே ஊரில் உள்ள கோரித்தோப்பு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அம்மணியம்மாளை மர்ம நபர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 55 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றார். அதேபோல் கடந்த 2008ம் ஆண்டு டிச. 29ம் தேதி திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி மங்களம் (70) மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.

                        ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் தனித் தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி அடுத்த தொளார் வடக்கு காலனியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்ச்செல்வன்(33) இரண்டு மூதாட்டிகளையும் நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அசோகன், இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த செந்தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். ஆயுள் தண் டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior