உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

சுனாமி வீடு கட்ட போலி ஆவணங்கள் தாக்கல்: மோசடி கான்ட்ராக்டர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

                     சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜிவ் காந்தி மறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுப்பவர்கள் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாயும், கூடுதல் வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுருத்தப்பட்டது. இந்த டெண்டரை எடுத்து, கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற் பேட்டையில் 'ஐ டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' நடத்தி வரும் கோண்டூர் ஜோதி நகர் சந்தானம் மகன் ராஜன் (29) என்பவர் 125 வீடுகள் கட்டி வருகிறார்.

                     இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டெண்டரில் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ராஜன் கொடுத்த வைப்பு தொகைக்கான ஆவணங்கள் போலியானவை என்பதும், போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி திட்ட ஒலுவலர் சீனுவாசன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றிய ராஜனை நேற்று மாலை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior