உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

பிளஸ் 2 பொது தேர்வில் சி.கே., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர் : 

                 கடலூர் சி.கே.பள்ளி மாணவி சாய்சுருதி 1146 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். பிளஸ் 2 பொது தேர்வில் கடலூர் சி.கே., பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 11 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். அதில் மாணவி சாய்சுருதி 1146 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் தமிழில் 183, ஆங்கிலம் 183, இயற் பியல் 197, வேதியியல் 193, கம்ப்யூட்டர் சயின்ஸ் 199, கணிதம் 191 மதிப்பெண் பெற்றார். மேலும் மாணவி பிரியங்கா 1146 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ராஜலட்சுமி 1136 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி இயக்குனர் சந்திரசேகர், முதல்வர் தாஷியஸ், கவுன்சிலர்கல் யாணி பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் உட்பட பலர் பாராட்டினர்.

Read more »

வீட்டுமனை கேட்டு ​சாலை​ ம​றி​யல்

விருத்தா​ச​லம்:
 
                    விருத்​தா​ச​லத்​தில் மனித உரிமை கட்சி சார்​பில் சாலை​ம​றி​யல் போராட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ கம்​மா​பு​ரம் ஒன்​றி​யத்​துக்கு உள்​பட்ட கோ.பொன்​னேரி,​​ கோ.மாவி​டந்​தல் கிரா​மத்​தைச் சேர்ந்த ஆதி​தி​ரா​விட மக்​கள் கடந்த 20-வது ஆண்​டு​க​ளாக மனைப்​பட்டா கேட்டு போராடி வருகிறார்கள்.​​ இது​கு​றித்து நட​வ​டிக்கை எடுக்​காத அரசு அதி​கா​ரி​க​ளைக் கண்டித்​தும்,​​ மனைப்​பட்டா வழங்​கக்​கோ​ரி​யும் மனித உரிமை கட்சி சார்​பில் சிதம்​ப​ரம் சாலை வளை​வில் சாலை மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ பின்னர் கட்​சி​யின் நிறு​வ​னத் தலை​வர் விஸ்​வ​நா​த​னி​டம் வட்​டாட்​சி​யர் ஜெய​ரா​மன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.​ இத​னைத் தொடர்ந்து பொது​மக்​கள் கலைந்து சென்றனர்.​ ​ ​போ​ராட்​டத்​தில் கட​லூர் மாவட்ட செய​லர் லட்​சு​ம​ணன் தலைமை தாங்கி​னார்.​ பாலு,​​ ராஜிவ்​காந்தி,​​ வீர​முத்து,​​ பஞ்​ச​நா​தன்,​​ விஜ​ய​லட்​சுமி,​​ மகா​லட்​சுமி உள்​பட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

விடு​தலைச் சிறுத்​தை​கள் ஆர்ப்​பாட்​டம்

கட​லூர்:

                 விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ சத்து​ண​வுப் பணி​யா​ளர்​கள் மற்​றும் அங்​கன்​வா​டிப் பணி​யா​ளர்​கள் பணி நிய​ம​னத்​தில்,​​ உச்ச நீதி​மன்ற ஆணைப்​படி,​​ தாழ்த்​தப்​பட்​டோ​ருக்​கான இட​ஒ​துக்​கீட்டை நிறை​வேற்ற வலி​யு​றுத்தி இந்த ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.​

                    வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மாறன் தலைமை வகித்​தார்.​     மாவட்​டத் துணைச் செய​லா​ளர்​கள் அறி​வு​டை​நம்பி,​​ செல்​லப்​பன்,​​ கதி​ர​வன்,​​ முத்​த​மிழ் மாறன் ஆகி​யோர் முன்​னிலை வகித்தனர்.​     நக​ரச் செய​லா​ளர் பாவா​ணன் வர​வேற்​றார்.​ தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செய​லா​ளர் திரு​மார்​பன்,​​ ஓவி​ய​ரணி மாநில துணைச் செய​லா​ளர் பேர​றி​வா​ளன்,​​ மக​ளிர் விடு​தலை இயக்க மாநில துணைச் செய​லா​ளர் குடி​ய​ரசி ​உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior