உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில்ஆனி திருமஞ்சன கொடியேற்றம்

 

சிதம்பரம் : 

                    சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, கடக லக்கினத்தில் சிற் சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெளி பிரகாரங்கள் வலம் வந்து கொடியேற் றும் நிகழ்ச்சி நடந்தது.

                        உத்சவ ஆச்சார்யர் நடராஜ ரத்ன தீட்சிதர் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 18ம் தேதி ரிஷப லக்கினத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தேர் உற்சவமும், இரவு ஆயிரங்கால் மண்டபம் முன் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. 1ம் தேதி நடராஜமூர்த்திக்கு, மகா அபிஷேகம் மற்றும் தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Read more »

விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் கூடுதல் வசூல்: தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

விருத்தாசலம் : 

                       விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ளது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத் திற்கு ரூபாய் 35, டி.சி., பெற ரூபாய் 300, சேர்க்கைக்கு ரூபாய் 120, புத்தக கமிஷன் ரூபாய் 10ம் வசூலிப்பதாக கூறி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் பள்ளியின் முன் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை அடையாளம் தெரியாத சிலர் கிழித்து விட்டனர். இதையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அசோகன், வட்ட குழு உறுப்பினர் சிவஞானம், வட்ட செயலாளர் கந்தசாமி, வீராசாமி, சக்திமணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று மதியம் பெண்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தனிடம் எதற்காக இவ்வாறு கட்டணம் வசூலிக்கிறீர்கள் என தாங்கள் அடித்த போஸ்டரை காட்டி கேட்டனர். அதை படித்து பார்த்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் இதுபோல் இங்கு யாரும் வசூலிப்பதில்லை என கூறினார். அதற்கு அசோகன் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார். அப்படி வசூலித் திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

வடலூரில் நின்றிருந்த கார் தீப்பிடித்ததால் திடீர் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி : 

                      வடலூரில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை மயிலாடுதுரையில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த டாடா இன்டிகா கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுரை செந்தில்குமார் அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது காரில் ஏ.சி., இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட் டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior